சிங்கப்பூரின் இரண்டாவது பெரிய டாக்சி நிறுவனம்

சிங்கப்பூரின் இரண்டாவது பெரிய டாக்சி நிறுவனம்

2 mins read
9b9aadd8-2da3-4a8a-a73c-f32177269975
-

எஸ்எம்ஆர்டி-பிரிமியர் இணைப்பு

எஸ்­எம்­ஆர்டி நிறு­வ­னத்­தின் டாக்சி பிரி­வான ஸ்டி­ரைட்­சும் பிரிமி­யர் டாக்­சிஸ் நிறு­வ­ன­மும் இணைந்து புதிய ஸ்டி­ரைட்ஸ் பிரீ­மி­யர் எனும் கூட்டு நிறு­வ­ன­மாக உரு­வெ­டுத்­துள்­ளன. இது சிங்­கப்­பூ­ரின் இரண்­டா­வது ஆகப் பெரிய டாக்சி நிறு­வ­ன­மாக அமை­யும். இது­கு­றித்த அறி­விப்பு நேற்று வெளி­யா­னது.

நூறாண்­டுப் பழ­மை­யான சைக்­கிள் அண்ட் கேரேஜ் நிறு­வன உரி­மை­யா­ள­ரின் பிரீ­மி­யர் டாக்­சிஸ் நிறு­வ­னம், சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் 'கேர்­ரோஸ் புரோ­ஜெக்ட் மேனேஜ்­மண்ட்' எனும் வாகன வர்த்­த­கக் குழு­மத்­தி­டம் கைமா­றி­யது.

இவ்­வாண்டு பிப்­ர­வரி மாத நில­வ­ரப்­படி, ஸ்டி­ரைட்ஸ் நிறு­வ­னத்­தி­டம் மொத்­தம் 1,537 டாக்­சி­களும் பிரிமி­யர் நிறு­வ­னத்­தி­டம் 965 டாக்­சி­களும் உள்­ளன. ஆக, புதிய நிறு­வ­னத்­தின்­கீழ் ஏறத்­தாழ 2,500 டாக்­சி­கள் சேவை வழங்­கும்.

சிங்­கப்­பூ­ரின் ஆகப் பெரிய டாக்சி நிறு­வ­னம் கம்­ஃபர்ட் டெல்­குரோ. அதன் வசம் 8,741 டாக்­சி­கள் உள்­ளன. 2,171 டாக்­சி­க­ளு­டன் டிரான்ஸ் கேப் மூன்­றா­வது நிலை­யில் உள்­ளது.

ஸ்டி­ரைட்ஸ் பிரிமி­யர் கூட்டு நிறு­வ­னத்­தில் எஸ்­எம்­ஆர்­டி­யின் ஸ்டி­ரைட்ஸ் ஹோல்­டிங்ஸ் பெரும்­பான்­மை­யான பங்­கு­களை வகிக்­கும்.

பத்­தாண்­டு­க­ளுக்கு முன்­னர் தனி­யார் வாடகை கார் சேவை தொடங்­கி­ய­தி­லி­ருந்து சிங்­கப்­பூ­ரின் டாக்சி நிறு­வ­னங்­கள் கடும் போட்­டியை எதிர்­கொள்­கின்­றன. தற்­போது நாட்­டில் 14,000க்கு குறை­வான டாக்­சி­களே சேவை வழங்­கு­கின்­றன. 2012ல் இருந்த எண்­ணிக்­கை­யில் அது 50 விழுக்­காட்­டிற்­கும் குறைவு.

இரு நிறு­வ­னங்­க­ளின் இணைப்­பால் தற்­போ­தைய ஓட்­டு­நர்­க­ளின் வாடகை ஒப்­பந்­தங்­களில் மாற்­றம் ஏதும் இருக்­காது என்று எஸ்­எம்­ஆர்டி தெரி­வித்­தது.

இத்­த­கைய நிறு­வன இணைப்பு, போட்­டித்­தன்­மையை வலுப்­ப­டுத்­த­வும் செய­லாக்­கச் செல­வு­க­ளை­யும் வாட­கைத் தொகை­யை­யும் குறைக்­க­வும் உத­வும் என்று தேசிய டாக்சி சங்­கம், தேசிய வாடகை கார் சங்­கம் ஆகி­ய­வற்­றின் ஆலோ­ச­கர் திரு ஆங் ஹின் கீ கூறி­னார்.