கையூட்டு தந்த கட்டுமான நிறுவன இயக்குநருக்குச் சிறை

1 mins read
111e787f-466e-4678-8501-8784340ec7cf
-

சிங்­கப்­பூர் வன­வி­லங்­குக் காப்­ப­கத்­தின் மூத்த மேலா­ள­ருக்கு லஞ்­சம் தந்­த­தன் தொடர்­பில் கட்­டு­மான நிறு­வன இயக்­கு­நர் ஒரு­வ­ருக்­குப் பத்து மாதச் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

'யுசிசி' எனும் கட்­டு­மான நிறு­வ­னத்­தின் இயக்­கு­ந­ரான 57 வயது இங் தியாம் ஹுவாட், 2017ஆம் ஆண்டு காப்­ப­கத்­தில் அப்­போது பணி­பு­ரிந்த கோ மெங் குவீ எனும் மேலா­ள­ருக்கு $72,000 கையூட்டு தந்­தார்.

வன­வி­லங்­குக் காப்­ப­கத்­தின் ஆறு பணித்­திட்­டங்­க­ளுக்கு ஒப்பந்தப்புள்ளி பெறு­வது தொடர்­பில் இவ்­வாறு லஞ்­சம் தரப்­பட்­டது. அத்­திட்­டங்­க­ளின் மொத்த மதிப்பு $420,000.

இங், தன்­மேல் சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்டை ஒப்­புக்­கொண்­டதை அடுத்து நேற்று அவ­ருக்­குத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. தற்­போது அவர் 'யுசிசி' நிறு­வ­னத்­தில் பணி­யில் இல்லை எனத் தெரி­கிறது. மேலா­ளர் கோவி­டம் இயக்­கு­நர் இங்கை, 'லேன்ட்ரோ' கட்­டு­மான நிறு­வ­னத்­தின் விற்­பனை மேலா­ள­ரான டே சுன் சியோங் என்­ப­வர் அறி­முகப்­ப­டுத்­தி­ய­தா­கக் கூறப்­பட்­டது.

இங், நேற்று $75,000 பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டார். இம்­மா­தம் 27ஆம் தேதி அவர் தனது தண்­ட­னையைத் தொடங்­கு­வார் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.