2023 முதல் 3 மாதங்களில் வளர்ச்சி வெறும் 0.1%தான்

2023 முதல் 3 மாதங்களில் வளர்ச்சி வெறும் 0.1%தான்

2 mins read
3d38fb7d-8c66-459f-b4b3-df51d1df9093
-

பொருளியல் மந்தம் தலைகாட்டும் ஆபத்து அதிகம் என வல்லுநர்கள் கருத்து

சிங்­கப்­பூ­ரின் பொரு­ளி­யல், ஆண்டுக்கு ஆண்டு அடிப்­படையில் இந்த ஆண்­டின் முதல் காலாண்­டில் வெறும் 0.1% மட்டுமே வளர்ந்து உள்­ளது. உலகப் பொரு­ளி­யல் நிலவரத்தின் தாக்கம் சிங்­கப்­பூரில் தெரி­ய­வந்­துள்­ளதையே இது காட்டுகிறது.

இதனால், பொரு­ளியல் வல்லு­நர்­கள் தங்களின்­ வளர்ச்சிக் கணிப்­பைக் குறைக்கத் தொடங்கி இருக்­கி­றார்­கள். பொரு­ளி­யல் மந்­தம் தலை­காட்­டக்­கூ­டிய ஆபத்து கூடியுள்ளது.

பொரு­ளி­யல் முந்­திய காலாண்­டில் 2.1% வளர்ச்சி கண்டு இருந்­தது. வர்த்­தக, தொழில் அமைச்சு வெளி­யிட்ட முன்கணிப்­பு­கள் மூலம் இந்த நில­வ­ரங்­கள் தெரிய வரு­கின்­றன.

இந்த ஆண்­டின் முதல் மூன்று மாதங்­களில் வளர்ச்சி 0.6% இருக்­கும் என்று ராய்ட்­டர்ஸ் ஆய்­வில் பொரு­ளி­யல் வல்லு­நர்கள் தெரி­வித்து இருந்­தார்­கள். ஆனால், அந்த அள­வுக்­குக்­கூட பொரு­ளி­யல் வள­ர­வில்லை.

பொரு­ளி­யல் நில­வ­ரம் பற்றி கருத்துக் கூறிய யுஓபி வங்கி, சிங்­கப்­பூர் பொரு­ளி­யல் மந்­தத்­தில் சிக்­கக்­கூ­டிய ஆபத்து கணி­ச­மாக இருக்­கிறது என்று தான் நினைப்­ப­தா­கத் தெரி­வித்­தது.

இந்த ஆண்­டின் முதல் இரண்டு காலாண்­டு­க­ளி­லும் வளர்ச்சி பூஜ்­ஜி­யத்­திற்­கும் குறைந்­தால் பொது­வாக அது நடை­முறை மந்­தமாகிவிடும்.

இந்த ஆண்டு ஜன­வரி முதல் மார்ச் வரை வர்த்­த­கம் தொடர்­பான துறை­கள் வளர்ச்­சி­யைப் பின்­னுக்­குத் தள்­ளின. முதல் காலாண்டு நில­வ­ரத்­தைப் பார்க்கை­யில், சிங்­கப்­பூ­ருக்­கான இந்த ஆண்டு வளர்ச்சி வாய்ப்பு எச்­ச­ரிக்­கை­ விடுப்பத போலவே இருக்­கும் என்­பது உறு­தி­ என்­றும் அந்த வங்கி கூறியது.

சீனப் பொரு­ளி­யல் கார­ண­மாக இரண்டாவது காலாண்­டில் ஊக்­கம் கிட்­ட­வில்லை என்­றால் பொருளியல் மந்­தம் சாத்­தி­யம்­தான் என்று மேபேங்க் வல்­லு­நர் சுவா ஹாக் பின் தெரி­வித்­தார்.

இந்த ஆண்­டின் முதல் மூன்று மாதங்­களின் மொத்த உள்­நாட்டு உற்­பத்தி பற்­றிய இறு­தி­யான விவரங்­கள் மே மாதம் வெளி­யி­டப்­படும்.

அதை அடிப்­ப­டை­யாக வைத்து இந்த ஆண்டு முழு­வ­தற்­கு­மான வளர்ச்­சியை வர்த்­தக, தொழில் அமைச்சு குறைத்­து­வி­டும் என்று தாங்­கள் எதிர்­பார்ப்­ப­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

இத­னி­டையே, இந்த ஆண்டு முழு­வ­தற்­கும் சிங்­கப்­பூ­ரின் மொத்த உள்­நாட்டு உற்­பத்தி வளர்ச்சி முன்பு கணிக்­கப்­பட்ட அள­வுக்கு இருக்­காது என்­றும் அது அநே­க­மாக 2% முதல் 3% வரைப்­பட்­ட­தாக இருக்­கும் என்றும் 'ஆர்­ஹெச்பி' நிறு­வ­னத்­தின் மூத்த பொரு­ளி­யல் வல்­லு­நர் பர்­னபாஸ் கான் கூறி­னார்.

இருந்­தா­லும், இந்த ஆண்­டின் பிற்­ப­கு­தி­யில் வளர்ச்சி வேகம் சூடு­பி­டிக்­கும் என்றே தான் கரு­து­வ­தா­க அவர் குறிப்­பிட்­டார்.

இந்த ஆண்டு பொரு­ளி­யல் 0.5% முதல் 2.5% வரை வள­ரும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக அமைச்சு கடந்த பிப்­ர­வரி மாதம் கணித்திருந்தது.