இரண்டு நிறுவனங்களுக்கு $650 மி. எம்ஆர்டி குத்தகைகள்

இரண்டு நிறுவனங்களுக்கு $650 மி. எம்ஆர்டி குத்தகைகள்

2 mins read
8df028f3-4902-4d9c-83b9-272afa21a44e
-

நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் மொத்­தம் $650 மில்­லி­யன் மதிப்­புள்ள இரண்டு குத்­த­கை­க­ளைக் கொடுத்து இருக்­கிறது.

சிங்­கப்­பூ­ரின் எட்­டா­வது எம்­ஆர்டி வழித்­த­ட­மான குறுக்­குத் தீவு வழித்­த­டத்­தில் முக்­கி­ய­மான நான்கு சாதன முறை களை அமைப்­ப­தற்­காக அந்த ஒப்பந்தங்கள் வழங்­கப்­பட்டன.

முத­லா­வது ஒப்பந்தம் 'சீமென்ஸ் மொபி­லிட்டி' என்ற நிறு­வ­னத்­திற்­குக் கொடுக்­கப்­பட்டு இருக்­கிறது. அதன் மதிப்பு சுமார் $450 மில்­லி­யன்.

இதன்­படி, அந்த நிறு­வ­னம் குறுக்­குத் தீவு வழித்­த­டத்­திற்­காக சமிக்ஞை முறை­க­ளை­யும் நடை­மேடைக் கத­வு­க­ளை­யும் வழங்­கும். அவற்றை வடி­வமைத்து, உரு­வாக்கி, பொருத்­தும் வேலை களை அந்த நிறு­வ­னமே செய்து கொடுக்­கும்.

இரண்­டா­வது ஒப்பந்தம் 'எஸ்டி இன்­ஜி­னி­ய­ரிங் அர்­பன் சொலு­ஷன்ஸ்' என்ற நிறு­வ­னத்­திற்கு கொடுக்­கப்­பட்டு உள்­ளது. இதன் மதிப்பு கிட்­டத்­தட்ட $200 மில்­லி­யன் ஆகும்.

குறுக்­குத் தீவு வழித்­த­டத்­திற்­கான ஒருங்­கி­ணைந்த மேற்­பார்வை கட்­டுப்­பாட்டு சாத­னங்­க­ளை­யும் தக­வல்­தொ­டர்பு சாத­னங்­க­ளை­யும் இந்த ஒப்பந்தம் உள்­ள­டக்­கும்.

அவற்றை வடி­வ­மைத்து, உரு­வாக்கி, வழங்கி, பொருத்தி, பரி­சோ­தித்து, செயல்­பட வைக்க வேண்­டிய பொறுப்பு அந்த நிறு­வ­னத்­தையே சாரும். நிலப் போக்கு­வ­ரத்து ஆணை­யம் இந்த விவ­ரங்­க­ளைத் தெரி­வித்­தது.

பல அம்­சங்­க­ளை­யும் சீர்­தூக்கிப் பார்த்து அவற்­றுக்­குப் பிறகே இந்த ஒப்பந்தங்கள் வழங்­கப்­பட்­ட­தாக ஆணை­யம் குறிப்­பிட்­டது. குறைந்த செலவு, தரம், அனு­ப­வம், சாதனை போன்ற பல­வும் கருத்­தில் எடுத்­துக்­கொள்­ளப்­பட்டு குத்­த­கை­கள் கொடுக்­கப்­பட்டு உள்­ளன.

குறுக்­குத் தீவு வழித்­த­டம் சிங்­கப்­பூ­ரின் கிழக்கு, வட­கி­ழக்கு, மேற்­குப் பகுதி மக்­க­ளுக்­குச் சேவை­யாற்­றும்.

அது ஜூரோங் ஏரி வட்டாரம், பொங்­கோல் மின்­னி­லக்க வட்டா ரம், சாங்கி வட்­டா­ரம் போன்ற பெரும் பெரும் மையங்­களை எல்லாம் இணைத்து உத­வும்.

அந்த 29 கி.மீ. வழித்­த­டத்­தில் அமை­யக்­கூ­டிய ரயில் நிலை­யங்­களில் கிட்­டத்­தட்ட பாதி நிலை­யங்­கள் முனை­யங்­க­ளாக இருக்­கும். அவற்­றில் இதர வழித்­த­டங்­கள் சந்­திக்­கும்.

ஆகை­யால், பய­ணி­கள் பல திசை­க­ளி­லும் எளிதாகப் பய­ணம் செய்ய அந்த வழித்­த­டம் மிக­வும் வச­தி­யாக இருக்­கும். குறுக்­குத் தீவு வழித்­த­ட கட்­டு­மா­ன வேலை மூன்று கட்­டங்­க­ளாக நடக்கும்.