மூத்த குடிமக்கள் நிலையத்திற்குள் நுழைந்த வாகனம்; உயிர்தப்பிய முதியவர்

மூத்த குடிமக்கள் நிலையத்திற்குள் நுழைந்த வாகனம்; உயிர்தப்பிய முதியவர்

2 mins read
f0a438eb-4310-4e03-bba5-c2833cd47467
-

மோன­லிசா

முதி­ய­வர் ஓட்­டிச் சென்ற வாக­னம் ஒன்று சிம்ஸ் டிரைவ் பகு­தி­யில் உள்ள மூத்த குடி­மக்­கள் நிலை­யத்­திற்­குள் நுழைந்­தது. நேற்று காலை 11.20 மணி­ய­ள­வில் அப்­ப­கு­தி­யின் புளோக் 44கில் நடை­பெற்ற இச்­சம்­ப­வத்­தில் அதிர்ஷ்­ட­வ­ச­மாக அந்த முதி­ய­வர் உயிர்­தப்­பி­னார்.

கட்­டுப்­பாட்டை இழந்த 77 வயது சீன ஆட­வ­ரின் ஆடி கார் முத­லில் அங்கு நிறுத்­தப்­பட்­டி­ருந்த மோட்­டார்­சைக்­கி­ளில் மோதி­யது. பிறகு அரு­கில் இருந்த கொளம் ஆயர் சிம்ஸ் விஸ்டா மூத்த குடி­மக்­கள் நிலை­யத்­தின் சுவ­ரில் மோதி­யது.

மோதிய வேகத்­தில் கார் கத­வு­கள் இறு­கிக்­கொண்­டன. திறக்­க­மு­டி­யாத நிலை­யில் 15 நிமிட போராட்­டத்­திற்கு பிறகு அரு­கி­லி­ருந்­த­வர் உத­வி­யு­டன் முதி­ய­வர் மீட்­கப்­பட்­டார்.

சம்­ப­வம் நடந்த சிறிது நேரத்­திற்­குள் காவல் துறை­யி­ன­ரும் அவ­சர உதவி வாக­ன­மும் சம்­பவ இடத்தை அடைந்­தன. வாக­னத்­தின் உயிர்­காக்­கும் பாதுகாப்புக் காற்றுப்பையின் உத­வி­யி­னால் முதி­ய­வ­ருக்கு எவ்­வித உடல் பாதிப்­பும் ஏற்­ப­ட­வில்லை.

"காலை 11 மணி­ய­ள­வில் நான் குளித்­துக்­கொண்­டி­ருந்­த­தேன். அப்­போது பெரும் சத்­தம் ஒன்று கேட்­டது. விபத்­தாக இருக்­க­வேண்­டும் என்ற ஊகத்­து­டன் கீழே சென்று பார்த்த போது கார் ஒன்று மூத்த குடி­மக்­கள் நிலை­யத்­தின் சுவரை இடித்த நிலை­யில் இருந்­தது. அரு­கில் சிதைந்த நிலை­யில் மோட்­டார்­சைக்­கிள் இருந்­தது. முதி­ய­வர் ஓரு­வர் முத­லு­தவி சிகிச்சை பெற்­றுக்கொண்­டி­ருந்­தார்," என்று கொளம் ஆயர் சிம்ஸ் விஸ்டா குடி­யி­ருப்­பா­ளர் குழு­வின் துணைத் தலை­வ­ரான முக­ம்மது பிலால் கூறி­னார்.

அக்­கு­ழு­வில் சுகா­தார ஊழி­ய­ரா­க­வும் மேற்­பார்­வை­யா­ள­ரா­க­வும் பணி­பு­ரி­யும் ஹவ்­ல­தெர் மாணிக், 33 "அந்த முதி­ய­வர் அந்த புளோக்­கில்­தான் வசிப்­ப­வர். தனிப்­பட்ட முறை­யில் பழக்­கம் இல்­லா­த­போ­தும் அவரை அடிக்­கடி பார்த்­தி­ருக்­கி­றேன். நல்­ல­வே­ளை­யாக பாதிப்பு இன்றி உயிர்­ தப்­பி­னார்," என்­றார்.

சிம்ஸ் டிரைவ் பகு­தி­யில் நேற்று காலை 11.20 மணி­ய­ள­வில் காரும் நிறுத்­தப்­பட்­டி­ருந்த மோட்­டார்சைக்­கி­ளும் மோதி விபத்­துக்­குள்­ளா­ன­தாக தக­வல் கிடைத்து என சிங்­கப்­பூர் காவல்­துறை கூறி­யது. 11.25 மணி­ய­ள­வில் சாலை விபத்து குறித்து தக­வல் வந்­த­தா­க­வும் ஒரு­வரை ராஃபிள்ஸ் மருத்­து­வ­ம­னைக்கு அழைத்­துச் சென்­ற­தா­க­வும் சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை தெரி­வித்­தது. முதி­ய­வர் சுய­நினை­வு­டன் மருத்­து­வ­ம­னைக்கு அழைத்து செல்­லப்­பட்­டார் என்­றும் விசா­ரணை மேற்­கோள்­ளப்­ப­டு­கிறது என்­றும் காவல்துறை தமிழ்­மு­ர­சி­டம் தெரிவித்தது.

monolisa@sph.com.sg