விரலிழந்த மாணவருக்கு முப்பரிமாண விரல்

விரலிழந்த மாணவருக்கு முப்பரிமாண விரல்

1 mins read
2bfbde38-dd97-44ca-a90c-3b186ebb4984
-

டான் டோக் செங் மருத்­து­வ­மனை நோயா­ளி­க­ளுக்கு முப்­ப­ரி­மாண தயா­ரிப்பு அடிப்­ப­டை­யி­லான இரண்டு கண்­டு­பி­டிப்­பு­கள் உதவி வரு­கின்­றன.

விபத்­து­களில் விரல்­களை அல்­லது கபா­லப் பகு­தியை இழந்து­விட்ட நோயா­ளி­கள், அந்தக் கண்­டு­பி­டிப்­பு­க­ளால் பல­ன­டை­கி­றார்­கள்.

ரசல் கோ, 21, என்ற பொறி­யி­யல் படிப்பு மாண­வர் 2022 அக்­டோ­பரில் நிகழ்ந்த சாலை விபத்து ஒன்­றில் தன் இரண்டு விரல்­களை இழந்­து­விட்­டார்.

மோதிர விரலை மருத்­து­வர்கள் மீண்­டும் பொருத்­தி­விட்­டார்­கள். ஆனால் சுண்­டு­வி­ர­லைப் பொருத்த முடி­ய­வில்லை.

முப்­ப­ரி­மாண தொழில்­நுட்­பம் மூலம் உரு­வாக்­கப்­பட்டு இருக்­கும் ஒரு செயற்கை விர­லைப் பொருத்த அந்த மாண­வர் தகுதி பெற்று இருக்­கி­றார். அந்த விரல் நேற்று ஊட­கங்­க­ளுக்குத் திறன் விளக்­கம் மூலம் காட்­டப்­பட்­டது (படம்). செயற்கை விர­லைப் போல் அல்­லா­மல் முப்­ப­ரி­மா­ண தொழில்­நுட்­பம் மூலம் உரு­வாக்­கப்­படும் விரலை நீட்டி, மடக்­க­லாம் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இதே­போல, அந்த மருத்­து­வ­மனை­யில் கபா­லப் பகு­தி­யும் உரு­வாக்­கப்­பட்டு பரி­சோ­திக்­கப்­பட்டு வரு­கிறது.

இந்த முப்­ப­ரி­மாண தொழில்­நுட்ப செயற்கை விரல் எடை குறை­வா­ன­தாக இருக்­கும். அவற்றின் செயல்­பா­டு­கள் அதி­கம். அதற்கு $500 செல­வா­கும்.

நோயா­ளி­க­ளுக்கு அது மிக­வும் பொருத்­த­மாக உள்­ளது என்று இந்த மருத்­து­வ­ம­னை­யைச் சேர்ந்த டாக்­டர் பெர்­னிஸ் ஹெங் கூறி­னார்.