ஞாயிறுகளில் நிரந்தரமாகும்

ஞாயிறுகளில் நிரந்தரமாகும்

1 mins read
8e79b9f3-cdfc-4fb6-8712-d2f94f241a00
-

சிலேத்­தா­ரில் உள்ள 4.6 கி.மீ. நீள சைக்­கி­ளோட்ட தடம் ஆறு மாத கால பரி­சோ­த­னையை அடுத்து ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில் காலை நேரத்­தில் நிரந்­த­ர­மா­கிறது.

இத­னை­ய­டுத்து ஒவ்­வொரு ஞாயிற்­றுக்­கி­ழமை காலை­யி­லும் அந்­தத் தடத்தை சைக்­கி­ளோட்­டி­கள் அனு­ப­விக்­க­லாம்.

வெஸ்ட் கேம்ப் ரோட்­டில் இருக்­கும் ஞாயிறு சைக்­கி­ளோட்­டத் தடம் வாரா­வா­ரம் காலை 5 மணி முதல் முற்­ப­கல் 11 மணி வரை செயல்­படும் என்று நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் நேற்று தெரி­வித்­தது.

அந்த நேரத்­தில் அந்­தத் தடத்தை சைக்­கி­ளோட்­டி­களும் பேருந்­து­களும் மட்­டும் பயன்­படுத்த முடி­யும். இத்­தனை பேர்­தான் ஒரு குழு­வா­கப் போக வேண்­டும் என்ற வரம்பு சைக்­கி­ளோட்டிகளுக்கு இராது.