பிரசவ வேதனையில் துடித்த பெண்ணுக்கு பேருதவி புரிந்த அதிகாரிகள்

பிரசவ வேதனையில் துடித்த பெண்ணுக்கு பேருதவி புரிந்த அதிகாரிகள்

1 mins read
1e9de59f-3f75-4704-add0-89c995168f41
-

பிர­ச­வத்­துக்­கு நாள் குறிக்­கப்­பட்ட இரு வாரங்­க­ளுக்கு முன்­னரே பனிக்­குடம் உடைந்து குழந்தை பெறத் தயா­ராக இருந்த மலே­சி­யப் பெண்­மணி விரைந்து ஜோகூர் செல்ல சிங்­கப்­பூர் குடி­நு­ழைவு அதி­கா­ரி­கள் பேரு­தவி புரிந்­த­னர். செங் கை லிங், 29, எனப்­படும் அந்­தப் பெண்­ணுக்­குக் குறிக்­கப்­பட்­டது ஏப்­ரல் 7ஆம் தேதி.

ஆனால், உட்­லண்ட்­ஸில் தங்­கி­யி­ருந்த அவ­ருக்கு மார்ச் 25ஆம் தேதி காலை 7 மணிக்­கெல்­லாம் பனிக்­கு­டம் உடைந்­து­விட்­டது. அதனை உணர்ந்து தூக்­கத்­தி­லி­ருந்து விழித்த அவர், ஜோகூர் மருத்­து­வ­ம­னை­யில் குழந்தை பெற­வேண்­டும் என்று ஏற்­கெ­னவே வகுத்­தி­ருந்த திட்­டப்­படி தமது கண­வ­ரு­டன் ஜோகூ­ருக்­குப் புறப்­பட்­டார். வலி­யைத் தாங்­கி­ய­வாறே உட்­லண்ட்ஸ் சோத­னைச்­சா­வ­டிக்­குச் சென்­றார். அவ­ரது கண­வர் ஓங் டெக் சான், 31, தமது மனை­வி­யின் அருகே பதற்­றத்­து­டன் இருப்­ப­தைக் கண்ட சிங்­கப்­பூர் குடி­நு­ழைவு சோத­னைச் சாவடி அதி­கா­ரி­கள் நிலை­மையை கேட்டறிந்த பின்­னர் அவ்­வி­ரு­வ­ருக்­கும் உதவ முன்­வந்­த­னர்.

திரு­வாட்டி செங்­கிற்கு உட­னடியாக சக்­கர நாற்­காலி வழங்­கினர். வழக்­கத்­தை­விட அதி­க­மா­க பய­ணி­கள் கூட்­டம் காணப்­பட்­ட­போ­தி­லும் அவர்­க­ளுக்கு விரை­வாக அனு­மதி வழங்­கப்­பட்­டது. அங்­கி­ருந்த முதல் உத­விக்­குழு அதி­கா­ரி­கள் அந்­தத் தம்­ப­தியை விரை­வாக அழைத்­துச் சென்று பேருந்து ஓட்­டு­ந­ரி­ட­மும் நிலை­மையை விளக்­கி­னர். குறிப்­பிட்ட நேரத்­திற்கு முன்­னரே ஜோகூர் இறங்­கிய அந்­தப் பெண்ணை அவ­ரது தந்தை இஸ்­கந்­தர் புத்ரி­ கொலம்­பியா ஆசியா மருத்­து­வ­ம­னை­யில் சேர்த்­தார். மாலை 4.30 மணி­க்கு ஆண்­கு­ழந்­தையை அப்­பெண் ஈன்­றெ­டுத்­தார்.