இளை­ய­ருக்­காக இளை­யர்­கள் நடத்­திய ‘யுத்­தம்’

கரு­ணா­நிதி துர்கா

தமி­ழில் சொல்­வ­ளத்தை மேம்­ப­டுத்­தும் போட்­டி­களை சிங்­கப்­பூர் தேசிய பல்­கலைக்­க­ழ­கத் தமிழ்ப் பேரவை பல ஆண்டு­க­ளாக தமிழ்­மொழி மாதத்­தின்­போது இளை­யர்­க­ளுக்­காக நடத்­தி­வ­ரு­கிறது. அவ்­வாறு இவ்­வாண்டு வளர்­தமிழ் இயக்­கத்­தின் ஆத­ர­வு­டன் ஆறா­வது முறை­யாக ஏற்­பாடு செய்­யப்­பட்ட ‘யுத்­தம்’, விளை­யாட்டு நிகழ்ச்சி பாணி­யில் நடத்­தப்­பட்­டது.

கடந்த ஈராண்­டு­க­ளாக இணை­யத்­தின் வழி நடத்­தப்­பட்ட இப்­போட்டி, இவ்­வாண்டு கொவிட்-19 கட்­டுப்­பா­டு­களின்றி சிறப்­பாக நடந்­தே­றி­யது.

இம்மாதம் 8ஆம் தேதி­யன்று உம­றுப்­புலவர் தமிழ்­மொழி நிலை­யத்­தில் நடை­பெற்ற ‘யுத்­தம்’ நிகழ்ச்­சி­யில், வளர்­த­மிழ் இயக்­கத்­தின் தலை­வர் திரு மனோ­க­ரன் சுப்­பையா சிறப்பு விருந்தி­ன­ரா­கக் கலந்து­கொண்­டார். அரையிறு­திச்­ சுற்­றில் ‘பிளிங்க் பண்­ணாம லிங்க் பண்ணு’, ‘மறைந்­தி­ருந்து பார்க்­கும் மர்­மம் என்ன’, ‘சொல் சொல் சொல்­லா­மல் சொல்’ எனும் போட்­டி­களும் இறு­திச்­சுற்­றில் ‘பிளிங்க் பண்­ணாம லிங்க் பண்ணு’, ‘இங்­கி­லிஷ் பேசி­னா­லும் தமி­ழன்டா’, ‘தமிழ் பேச்சு எங்­கள் மூச்சு’ எனும் போட்­டி­களும் நடத்­தப்­பட்­டன.

புது­மை­யான போட்­டி­ அங்­கங்­கள் பங்கு­பெற்­ற­வர்­களை மட்­டும் அல்ல பார்­வை­யா­ளர்­க­ளை­யும் வெகு­வாகக் கவர்ந்­தன.

கொடுக்­கப்­பட்­டுள்ள கருப்­பொ­ரு­ளை­யொட்டி ஒரு வார்த்­தை­யில் இருக்­கும் மெய் எழுத்­துகளை யூகித்து ஹேங்­மேன் (Hangman) விளை­யாட்டு பாணி­யில் “தமிழ் பேச்சு எங்­கள் மூச்சு” என்­னும் போட்டி அங்­கம் உற்­சா­க­மூட்­டும் வகை யில் அமைந்­தது.

உயர்­நி­லைப்­பள்ளி மாண­வர்­க­ளுக்­கான பிரி­வில் ராஃபிள்ஸ் பெண்­கள் உயர்­நி­லைப் பள்ளி மாண­வி­கள் வெற்றி பெற்­ற­னர். உயர்­நி­லைப் பள்­ளிக்­குப் பிந்­தைய நிலை­யில் பயி­லும் மாண­வர் களுக்­கான பிரி­வில் ஆண்­டர்­சன் சிராங்­கூன் தொடக்­கக்­கல்­லூரி மாண­வர்­கள் முதல் பரி­சைத் தட்­டிச் சென்­ற­னர்.

“நாங்­கள் முதல்­மு­றை­யாக யுத்­தம் போட்­டி­யில் பங்­கு­பெற்று எதிர்­பா­ராத வித­மாக வெற்­றி­பெற்­றுள்­ளோம். நிச்­ச­ய­மாக நாங்­கள் தொடர்ந்து ஆர்­வத்­து­டன் தமிழ்மொழி மாத நிகழ்ச்­சி­களில் கலந்து­கொள்­வோம்,” என்று முதல் பரிசு பெற்ற ஆண்­டர்­சன் சிராங்­கூன் தொடக்­கக்­கல்­லூரி மாண­வர்­கள் கூறி­னர்.

“இந்த நிகழ்ச்சி ஒரு வெற்­றி­யாக அமைய எங்­கள் ஏற்­பாட்­டுக் குழு­வின் ஆறுமாத கால உழைப்பு முக்­கி­யப் பங்கு வகித்­தது,” என யுத்­தம் 2023ன் ஏற்­பாட்­டுக் குழு தலை­வ­ரான யுகேஷ் கண்­ணன், 21, கூறி­னார்.

இளை­யர்­க­ளுக்­காக இளை­யர்­கள் ஏற்­பாடு செய்­தி­ருந்த இந்­தச் சொல்­வளப் போட்டி, எழுத்­துத் தமி­ழி­லும் பேச்­சுத் தமி­ழிலும் மாணவர்களுக்குள் இருக்கும் திறனை வெளிப்­ப­டுத்த நல்­ல­தொரு தள­மாக அமைந்­தது.

“­போட்­டி­யில் மாண­வர்­கள் ஆர்­வமா­கப் பங்­கு­பெ­று­வ­தை­யும் அவர்­கள் தமிழ் மொழி மீது கொண்­டுள்ள நாட்­டத்­தை­யும் காண்­ப­தில் மிக்க மகிழ்ச்சி,” என்றார் சிங்­கப்­பூர் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேர­வை­யின் துணைத் தலைவி, பால­மு­ரு­கன் தீபிகா, 21.

“குறிப்­பாக, இளை­யர்­க­ளுக்­காக ஏற்­பாடு செய்­யப்­பட்ட இது­போன்ற போட்­டி­கள் அவர்­க­ளி­டத்­தில் தமிழ்­மொழி மீதான பற்றை அதி­க­ரிக்­கின்­றன. அவர்­க­ளுக்­குத் தமிழ்­மொ­ழியை சுவா­ர­சி­ய­மான முறை­யில் கொண்டு செல்­லும் இந்­நி­கழ்ச்­சி­க­ளுக்கு நாம் தொடர்ந்து ஆத­ர­வ­ளிக்க வேண்­டும்,” என்று திரு மனோ­க­ரன் சுப்­பையா அறி­வு­றுத்­தி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!