சிங்கப்பூரில் அதிகாரத்துவ வறுமைக்கோடு, கட்டாய பாலர் பள்ளிக் கல்வி, வேலையில்லாதோருக்கு ஆதரவு: நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரை

சிங்கப்பூரில் அதிகாரத்துவ வறுமைக்கோடு, கட்டாய பாலர் பள்ளிக் கல்வி, வேலையில்லாதோருக்கு ஆதரவு: நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரை

3 mins read
d8152c04-45de-4f0c-845f-842c6bf94eee
-

தெளி­வான வறு­மைக்கோட்டை வரை­ய­றுத்­தல், பாலர் பள்­ளிக் கல்­வியை கட்­டா­ய­மாக்­கு­தல், வேலை­யில்­லா­தோ­ருக்­கான ஆத­ர­வுத் திட்­டம் ஆகி­யவை நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் உறுப்­பி­னர்­க­ளால் முன்­வைக்­கப்­பட்ட பரிந்­து­ரை­களில் அடங்­கும்.

அதி­பர் உரை மீதான ஐந்து நாள் விவா­தத்­தைத் தொடங்கி வைத்து அவர்­கள் பேசி­னர். திரு­வாட்டி ஹலிமா யாக்­கோப் ஏப்­ரல் 10ஆம் தேதி ஆற்றிய உரை, அர­சாங்­கத்­திற்­கான மற்ற முக்­கிய முன்­னு­ரி­மை­களில் சமூக பாது­காப்­புக் கட்­ட­மைப்பை வலுப்­ப­டுத்த வேண்­டி­ய­தன் அவ­சி­யத்தை வலி­யு­றுத்­தி­யது.

இரு வார இடை­வெ­ளிக்­குப் பிறகு மீண்­டும் தொடங்­கிய 14வது நாடா­ளு­மன்­றத்­தின் இரண்­டா­வது அமர்­வின் தொடக்­க­மாக அவ­ரது உரை அமைந்­தது.

சமூக ஆத­ரவை மேம்­ப­டுத்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் முன்­மொ­ழிந்த நான்கு பரிந்­து­ரை­கள்:

அனைத்­துக் குழந்­தை­களும் பாலர்­பள்­ளிக்­குச் செல்­வதை உறு­தி­செய்­வது முக்­கி­யம் என்று குறிப்­பிட்ட செம்­ப­வாங் குழுத்­தொ­குதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான திரு விக்­ரம் நாயர், பாலர்­பள்­ளிக் கல்­வியை கட்­டா­ய­மாக்க வேண்­டும் அல்­லது எல்­லாப் பிள்­ளை­களும் பள்­ளிக்­குச் செல்­வதை ஊக்­கு­விக்க வலு­வான நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்­டும் என்று பரிந்­து­ரைத்­தார்.

வறு­மைக்கோட்டை

வரை­ய­றுப்­பது

சிங்­கப்­பூர் அதி­கா­ர­பூர்வ வறு­மைக்கோட்டை வரை­ய­றுப்­ப­தற்­கான நேரம் இது என்று பேரா­சி­ரி­யர் ஜேமஸ் லிம் கூறி­னார். செங்­காங் குழுத்­தொ­கு­திக்­கான பாட்­டா­ளிக் கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக அவர், அது "வசிப்­பி­டம், உணவு, உடை­கள் எனும் 'அடிப்­படை' தேவை­க­ளுக்கு அப்­பாற்­பட்ட கூறு­க­ளின் அடிப்­ப­டை­யில் இருக்க வேண்­டும் என்­றார்.

இதைத் தீர்­மா­னிக்க சமுதாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சின் பிர­தி­நி­தி­கள், பொது சமூ­கத் தலை­வர்­கள், கல்­வி­யா­ளர்­க­ளைக் கொண்ட ஒரு குழு அமைக்­கப்­பட வேண்­டும் என்­றார் அவர்.

அர­சாங்க உத­விக்­கான அனைத்து வரம்­பு­களும், குறிப்­பாக நிதி உத­வித் திட்­ட­மான காம்­கேர், இந்த வறு­மைக்கோட்­டுக்கு அல்­லது அதற்­கும் மேல் உள்­ள­தாக இணைக்­கப்­பட வேண்­டும். உள்­ளூர் தகு­திச் சம்­ப­ள­மும் (LQS) இத­னு­டன் இணைக்­கப்­பட வேண்­டும். LQS என்­பது வெளி­நாட்டு ஊழி­யர்­களை வேலைக்கு அமர்த்­தும் நிறு­வ­னங்­க­ளுக்கு மனி­த­வள அமைச்சு நிர்­ண­யித்­துள்ள ஊதிய வரம்பு ஆகும்.

அத்­தகைய நிறு­வ­னங்­கள் முழு­நேர உள்­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு குறைந்­த­பட்­சம் $1,400 வழங்க வேண்­டும்.

தற்­போ­தைய ஆத­ர­வுத் திட்­டங்­கள் பல்­வேறு வரு­மான வரம்­பு­க­ளைக் கொண்­டி­ருப்­ப­தாக பேரா­சி­ரி­யர் லிம் குறிப்­பிட்­டார்.

பொது வாடகை குடி­யி­ருப்­பு­களுக்­குத் தகு­தி­பெற அதி­க­பட்ச மாத வரு­மா­னம் $1,500 ஆக­வும் அதே நேரத்­தில் காம்­கேர் பெறு­வ­தற்­கான வரம்பு கிட்­டத்­தட்ட $1,900 ஆக­வும் உள்­ள­தாக அவர் சுட்­டி­னார்.

வேலை­யில்­லா­தோ­ருக்­கான ஆத­ரவு

ஆட்­கு­றைப்பு போன்ற கார­ணங்­க­ளால் வேலை­யின்­றித் தவிக்­கும் ஊழி­யர்­க­ளுக்­கான ஆத­ர­வுத் திட்­டம் வேண்­டும் என்­றார் தெம்­ப­னிஸ் குழுத்­தொ­குதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் திரு டெஸ்­மண்ட் சூ.

ஊழி­ய­ர­ணி­யின் வேலை நெறி­மு­றை­க­ளைப் பாது­காக்­கும் வகை­யில், பயிற்சி வேலை தேடல் உத­வி­யு­டன் இந்த ஆத­ரவை இணைக்­க­லாம் என்­று அவர் தெரிவித்தார்.

"ஒரு­வர் எவ்­வ­ளவு காலம் வேலை­யின்றி இருக்­கி­றாரோ, அந்த அள­விற்கு அவ­ருக்­கான வேலை­வாய்ப்­பு­கள் குறை­யும்.

"எனவே, இந்த ஆத­ரவு அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டால், அது தனி­ந­பர்­கள் மீண்­டும் ஊழி­ய­ர­ணி­யில் சேர ஊக்­கு­விப்பு வழங்­கு­வ­தாக இருக்க வேண்­டும்," என்று அவர் கூறி­னார்.

பயிற்­சி­யும் மறு­தி­ற­னும் நாட்­டின் வேலை நெறி­மு­றை­யின் முக்­கிய அம்­ச­மாக இருந்­தா­லும், தொடர்ந்து அவ்­வாறு செய்­வது ஊழி­யர்­க­ளுக்கு மனச்­சோர்வை ஏற்­ப­டுத்­தக்­கூ­டும். ஆனால், அவர்­க­ளால் வேலை பெற முடி­யா­மல் போக­லாம், குறிப்­பாக வய­தான ஊழி­யர்­க­ளால்.

இத்­த­கைய அபா­யங்­களை முற்­றி­லு­மாக அகற்ற முடி­யா­விட்­டா­லும், அதி­க­மான வேலை நிய­ம­னம் - பயிற்சி திட்­டங்­கள் மூலம் இதை சமன்­ப­டுத்த முடி­யும் என்று திரு சூ கூறி­னார்.

பரா­ம­ரிப்­பா­ள­ருக்கு ஆத­ரவு

பரா­ம­ரிப்­பா­ள­ரா­க­வும் இருக்­கும் வேலை பார்க்­கும் பெண்­கள், தன்­னு­ரிமை ஊழி­யர்­கள், சிறப்­புத் தேவை­யுள்ள பெரி­ய­வர்­கள் ஆகிய மூன்று பிரி­வினருக்கு ஆத­ரவு தேவை என்­றார் பாசிர் ரிஸ்-பொங்­கோல் குழுத் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் திரு­வாட்டி இயோ வான் லிங்.

ஊழி­யர்­க­ளுக்­கான பரா­ம­ரிப்பு விடுப்பு பரி­சீ­லிக்­கப்­ப­ட­லாம் என்­றும், முடிந்­த­வரை முத­லா­ளி­கள் நீக்­குப்­போக்­கான வேலை ஏற்­பா­டு­களை நீட்­டிக்­க­லாம் என்­றும் அவர் பரிந்­து­ரைத்­தார்.

இணை­ய­வழி ஊழி­யர்­கள் எதிர்­கொள்­ளும் கண்­ணுக்­குத் தெரி­யாத அபா­யங்­களை சிங்­கப்­பூ­ரர்­கள் அவர்­கள் சேவை­களைத் நாடும்பொது மன­தில் கொள்­ளும்­படி கேட்­டுக்கொண்­டார்.

உணவு அல்­லது பிற தள­வாடத் தேவை­களை வழங்­கும்­போது இணை­ய­வழி ஊழி­யர்­களுக்கு உடல் பாது­காப்­பிற்கு ஏற்­படும் அபா­யங்­கள், அவர்­களின் ஓய்­வுக்­கால சேமிப்பு, சுகா­தார பாது­காப்பு கட்­ட­மைப்­பு­கள், வீட்­டு­வ­சதி ஆகி­யவை பற்றி கருத்­தில்­கொள்ள வேண்­டும் என்­று அவர் குறிப்பிட்டார்.

சமூ­கத்­தின் மற்ற உறுப்­பினர்­க­ளின் ஆத­ர­வு­டன் சிறப்­புத் தேவை­கள் உள்ள பெரி­ய­வர்­கள் பாது­காப்­பா­க­வும் கண்­ணி­ய­மா­க­வும் வாழ்­வதை உறு­தி­செய்ய இன்­னும் பல­வற்­றைச் செய்ய வேண்­டும் என்­றும் திரு­வாட்டி இயோ கூறி­னார்.