எஸ்ஐஏ விமானத்தில் கோளாறு: கென்யா விமான நிலையம் தற்காலிக மூடல்

எஸ்ஐஏ விமானத்தில் கோளாறு: கென்யா விமான நிலையம் தற்காலிக மூடல்

1 mins read
c55b382b-1b15-4f6a-8651-a580a0591377
-

சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் (எஸ்­ஐஏ) சரக்கு விமா­னத்­தில் தொழில்­நுட்பக் கோளாறு ஏற்­பட்­ட­தை அடுத்து நைரோ­பி­யி­லுள்ள ஜோமோ கென்­யாட்டா அனைத்­து­லக விமான நிலை­யத்­தில் அனைத்து விமான சேவை­களும் தற்­கா­லி­க­மாக நிறுத்­தப்­பட்­டுள்­ளன.

சிங்­கப்­பூர் நேரப்­படி நேற்று பிற்­ப­கல் 2.32 மணிக்கு வெளி­யிட்ட டுவிட்­டர் செய்தி­யில், சரக்கு விமா­னம் ஒன்று தொழில்­நுட்­பக் கோளா­றினால் புறப்­ப­டத் தவ­றி­ய­தால் விமான நிலை­யத்­தின் ஒரே ஓடு­பா­தை தற்­கா­லி­க­மாக மூடப்­பட்­ட­தாக கென்யா விமான நிலைய ஆணை­யம் கூறியது.

SQ7343 போயிங் 747-412F சரக்கு விமா­னம் ஜோமோ கென்­யாட்டா விமான நிலை­யத்­தில் நேற்று மதி­யம் 12.39 மணிக்கு (சிங்­கப்­பூர் நேரப்­படி) ஓடு­பா­தை­யில் செல்­லத் தொடங்­கி­யது. அதி­க­பட்ச தரை வேகம் 151 நாட்ஸ் அல்­லது மணிக்கு 280 கிமீ வேகத்தை எட்­டிய விமா­னம் பிறகு மெல்ல நின்­ற­தாக ஃப்ளைட்­ரா­டார்24 என்ற விமா­னக் கண்­கா­ணிப்பு இணை­யத் தளத் தக­வல் தெரி­வித்­தது. விமா­னம் நைரோ­பி­யில் இருந்து ஆம்ஸ்­டர்­டா­முக்கு நேற்று காலை 6.30 மணிக்கு செல்ல இருந்­தது.

ஓடு­பா­தை­யில் விமா­னம் அப்­ப­டியே நிற்­பதை இந்த இணை­யத்­தளப் படங்­கள் காட்­டு­கின்­றன.

அனைத்­துப் பய­ணி­களும் தங்­கள் விமா­னப் பய­ணங்­கள் குறித்த கூடு­தல் தக­வ­லுக்கு அந்­தந்த விமான நிறு­வ­னங்­க­ளைத் தொடர்பு கொள்­ளு­மாறு கென்யா விமான நிலை­யங்­கள் ஆணை­யம் டுவிட்­ட­ரில் தெரி­வித்­துள்­ளது.