உரை பெயர்ப்பாளர்கள், மொழிபெயர்ப்பாளர்களுக்கு வாய்ப்பு

உரை பெயர்ப்பாளர்கள், மொழிபெயர்ப்பாளர்களுக்கு வாய்ப்பு

1 mins read
387e01cf-8463-4c8f-9e60-1eeaf2260005
-

தனி­யார் துறை­யில் மொழி­பெயர்ப்­பா­ள­ரா­க­வும் உரை பெயர்ப்­பா­ள­ரா­க­வும் குறைந்­தது ஓர் ஆண்டுக்கு சேவை­யாற்­றி­வரும் சிங்­கப்­பூ­ரர்­கள் தங்­கள் திறனை மேம்­ப­டுத்­திக்­கொள்ள தொடர்பு, தக­வல் அமைச்­சின் மொழி­பெயர்ப்­புத் திற­னா­ளர் மேம்­பாட்­டுத் திட்­டம் கைகொ­டுக்­கிறது.

தமிழ்­மொ­ழி­யில் பட்­ட­யம், பட்டக்­கல்வி ஆகி­யவை உள்­பட மொழி, மொழி­பெ­யர்ப்பு சார்ந்த பயி­ல­ரங்­கு­கள், இணை­யப் பகிர்­வ­ரங்­கு­கள், கலந்­து­ரை­யா­டல்­கள், மாநா­டு­கள், சான்­றி­தழ் சார்ந்த தேர்­வு­கள் ஆகி­ய­வற்­றுக்­குச் செல்ல தகு­தி­பெ­றும் சிங்கப்­பூர் மொழி­பெ­யர்ப்­பா­ளர்­களும் உரை பெ­யர்ப்­பா­ளர்­களும் மானி­யத்தைப் பயன்­ப­டுத்­திக்கொள்­ள­லாம்.

இதில் ஓர் ஆண்­டுக்­குள் முடிக்­கப்­படும் திட்­டங்­கள் ஏப்ரல் முதல் தேதிக்­குள் ஆரம்­பிக்க அல்­லது முடிக்க வேண்­டும்.

ஓர் ஆண்­டுக்கு மேலாக நீடிக்கும் திட்­டங்­களை மேற்­கொள்­வோர் விண்­ணப்­பம் அனுப்­பிய மூன்று ஆண்­டு­களுக்­குள் 31 மார்ச் தேதிக்­குள் முடிக்க வேண்­டும்.

அவற்­றில் பங்­கேற்­ப­தற்­குச் செல­வா­கும் கட்­ட­ணத்­தில் 90 விழுக்­காடுவரை அல்­லது அதிக­பட்­சம் $10,000 வரை ஈடு­செய்ய மானி­யம் உத­வும்.

இந்த ஆண்­டுக்­கான விண்­ணப்­பங்­களை 2023 ஜூன் 30ஆம் தேதிக்­குள் தாக்­கல்­செய்ய வேண்­டும்.

https://www.mci.gov.sg/ முக­வ­ரி­யில் மேல் விவ­ரங்­க­ளைப் பெற்­றுக்­கொள்­ள­லாம்.