வரும் நாள்கள் வெப்பமாக இருக்கும்

வரும் நாள்கள் வெப்பமாக இருக்கும்

1 mins read
e1cb45d7-4704-45b9-926c-7435d0f2dd39
-

ஏப்ரல் மாதத்தின் எஞ்சிய நாள்கள் வெப்பமாக இருக்கும் என்று சிங்கப் பூரின் வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

ஏப்ரலில் அடுத்து வரும் சில நாள்களில் வெப்பம் அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியசைத் தொடக் கூடும். மேகங்கள் குறை வாகக் காணப்படும்.

நிலப்பரப்புகளில் பகல்நேர வெப்பம் அதிகமாக இருப்ப தால் பெரும்பாலான பிற் பகல்களில் சிங்கப்பூரின் சில பகுதிகளில் குறுகிய கால இடியுடன்கூடிய மழை பெய்யலாம். ஒரு சில நாள்களில் மழை மாலை வரை நீடிக்கக்கூடும்.

மலாக்கா நீரிணையில் உருவாகும் சூறாவளி கிழக்குப் பக்கமாக சிங்கப்பூர் நோக்கி நகர்வதால் ஒரு சில நாள்களில் விடியற் காலையில் ஒன்று அல்லது இரண்டு நாள்களுக்கு பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம்.

ஒட்டுமொத்தமாக ஏப்ரல் இரண்டாம் பாதியில் சராசரி மழை பெய்யக்கூடும். சில இடங்களில் சராசரிக்கும் குறைவாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்தது.