வெளிநாட்டு ஊழியர்களுக்கு பாரபட்சம் காட்டப்படுவதில்லை: முயிஸ் விளக்கம்

2 mins read
163f1a1a-500d-4154-9d86-1010a192e842
-

'நோன்புப் பெருநாள் தொழுகைக்கான எந்த இடத்தையும் பயன்படுத்தலாம்'

தொழு­கைக்­கான இடத்­தைப் பயன்­ப­டுத்­து­வ­தில் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு எந்­த­வி­தப் பார­பட்­ச­மும் காட்­டப்­படவில்லை­.

பள்ளி­வா­சல்­கள், குடி­யி­ருப்­புப் பேட்­டை­கள் மற்­றும் தங்­கு­மி­டங்­களில் ஒதுக்­கப்­பட்ட கூடு­தல் இடங்­களை தங்­க­ளு­டைய நோன்புப் பெரு­நாள் தொழு­கைக்கு வெளி­நாட்டு ஊழி­யர்­கள் பயன்­ப­டுத்தலாம் என்று முயிஸ் எனப்படும் சிங்­கப்­பூர் இஸ்­லா­மிய சமய மன்­றம் நேற்று விளக்­க­ம­ளித்­தது.

சிங்­கப்­பூர் பங்­ளா­தேஷ் சமூ­கம் வெளி­யிட்ட ஆலோ­ச­னைக் குறிப்பு ஒன்று, சமூக ஊட­கங்­களில் கட்­டுக்­க­டங்­கா­மல் பர­வி­ய­தைத் தொடர்ந்து முயி­ஸின் அறிக்கை வெளி­யானது.

பங்­ளா­தேஷ் முஸ்­லிம் ஊழி­யர்­க­ளுக்கு எழு­தப்­பட்ட அந்­தக் குறிப்­பில், ஏப்­ரல் 22ஆம் தேதி தங்­க­ளு­டைய தங்­கு­மி­டங்­க­ளி­லேயே தொழுகை மேற்­கொள்­ளும்­படி முயிஸ் கேட்­டுக் கொண்ட­தாக அச்­ச­மூ­கம் குறிப்­பிட்­டி­ருந்­தது.

இது நெரி­சல் ஏற்­ப­டு­வ­தை­யும் சாலை­களில் போக்­கு­வ­ரத்து பாதிக்­கப்­ப­டு­வ­தை­யும் தடுக்க உத­வும் என்­றும் அனை­வ­ரின் ஆரோக்­கி­யம், பாது­காப்பு உறுதி செய்ய உத­வும் என்­றும் அந்த சுற்­ற­றிக்கை தெரி­வித்­தது.

இதில் முயிஸ் சார்­பில் பங்­ளா­தேஷ் சமூ­கம் கையெ­ழுத்­திட்டு இருந்தது. ஞாயிறு மதி­யம் முதல் சமூக ஊட­கங்­களில் பர­வத் தொடங்­கிய இந்த அறி­விப்­புக்கு பலர் எதிர்­ம­றை­யான விமர்­ச­னங்­க­ளைப் பதிவு செய்­தி­ருந்­த­னர்.

ஒரு டுவிட்­டர் பதி­வா­ளர், "இது அபத்­த­மா­னது. வெளி­நாட்டு ஊழி­யர்­கள் பலர் தங்­க­ளு­டைய மதிப்­பு­மிக்க விடு­முறை நாள்­களில் பள்­ளி­வா­சல்­களில் தொண்­டூ­ழி­யம் செய்கின்றனர். தங்­க­ளு­டைய சம்­ப­ளத்­தி­லி­ருந்து தாரா­ள­மாக நன்­கொ­டை­ வழங்­கு­ கின்­ற­னர்," என்று கூறியுள்ளார்.

மற்­றொரு பதி­வா­ளர், "மாற்று ஏற்­பா­டு­கள் செய்­யப்­ப­டுமா, ஊழி­யர்­க­ளுக்­கான போக்­கு­வ­ரத்தை பர­வ­லாக்க முடி­யுமா, கூடு­தல் இடங்­களை ஒதுக்க நிதி­யு­தவு வழங்­கப்­ப­டுமா என்று கேட்­டுள்­ளார்.

இந்த நிலை­யில் உள்­ளூர் பள்­ளி­வா­சல்­களில் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளின் பங்­க­ளிப்பை ஒப்­புக்­கொண்ட முயிஸ், உள்­ளூர், வெளி­நாட்­ட­வர்­கள் பாது­காப்­பாக, வச­தி­யாக தொழு­கை­யில் ஈடு­படு வதற்­காக பள்­ளி­வா­சல்­க­ளு­டன் சேர்ந்து முயிஸ் செய்­துள்ள முழு ஏற்­பா­டு­கள் பற்றி பங்­ளா­தேஷ் சமூ­கத்­தின் அறிக்­கை­யில் தெரி விக்­கப்­ப­ட­வில்லை என்று கூறி­யது. "தங்­கு­மி­டங்­களில் தொழு­கைக்­கான இடங்­களை மும் மடங்கு அதி­க­ரித்­துள்­ளோம். தீவு முழு­வ­தும் உள்ள நமது குடி யிருப்பு பேட்­டை­களில் கூடு­த­லாக 10,000 இடங்­க­ளுக்­கான இரு­ப­துக்­கும் மேற்­பட்ட தொழுகை இடங்­களை அறி முகப்­ப­டுத்­தி­யுள்­ளோம்," என்ற முயிஸ், உள்­ளூர் பள்ளி வாசல்­களில் மட்­டும் 240,000 தொழு­கைக்­கான இடங்­கள் இருப்­ப­தா­கத் தெரி­வித்­தது.