பாசிர் ரிஸ் பூங்காவில் அரியவகை விஷப்பாம்பு

பாசிர் ரிஸ் பூங்காவில் அரியவகை விஷப்பாம்பு

1 mins read
c1864d25-6c23-41e2-a3e9-1eabb071b7e6
-

பாசிர் ரிஸில் கேளிக்கை மைதா­னம், கடற்­க­ரைக்கு இடையே உள்ள பூங்­கா­வில் திங்­கள் கிழமை அரிய வகை விஷப் பாம்பு கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

மரத்­தி­லி­ருந்து புல் தரை­யில் கறுப்பு, வெள்ளை பட்டை கொண்ட பாம்பு ஊர்ந்து செல்­வதை ஃபேஸ்புக்­கில் பதி­வேற்­றப்­பட்ட காணொ­ளி­யில் காண முடிந்­தது.

இதனை சிங்­கப்­பூ­ரில் உள்ள ஊர்­வன, நீர்­வாழ் உயி­ரி­னங்­களை ஆய்வு செய்­யும் 'எச்­எஸ்­எஸ்' என்ற தொண்­டூ­ழிய அமைப்­பும் உறுதி செய்­தி­ருந்­தது.

காணொ­ளி­யைப் பதி­வேற்­றிய ஜிம்மி ஹுன், சைக்­கி­ளில் சென்­று­கொண்­டி­ருந்­த­போது பாம்பை அடை­யா­ளம் கண்­டு பி­டித்­த­தா­கக் கூறி­னார்.

"முத­லில் கயிறு என்று நினைத்­தேன். ஆனால் அது நகர்ந்­த­தும் பாம்பு என்­பது தெரிந்­தது," என்­றார் அவர்.

இது பற்றி கருத்து கூறிய தேசிய பூங்­காக் கழ­கத்­தின் கிழக்கு வட்­டா­ரப் பூங்­காக் களுக்­கான குழும இயக்­கு­நர், பாம்பு பற்றி கேள்­வி­யுற்­ற­தா­க­வும் கழ­கத்­தின் ஊழி­யர் சென்ற போது அங்கு பாம்பு இல்லை என்­றும் தெரி­வித்­தார்.