தகுதிக்கு முன்னுரிமை அனைத்திற்கும் தீர்வாகாது

தகுதிக்கு முன்னுரிமை அனைத்திற்கும் தீர்வாகாது

2 mins read
4e1f03ef-c199-4c6b-92ef-7a68fbecb62a
-

ஒற்றை அளவைமுறையால் வெற்றியை வரையறுக்கக்கூடாது: அமைச்சர் சான் வலியுறுத்து

எதிர்­கா­லச் சவால்­களை எதிர்­கொள்­ளும் வகை­யில் பல­த­ரப்­பட்ட வலி­மை­க­ளு­டன் கூடிய மீள்­தி­றன்­மிக்க சமு­தா­யத்தை சிங்­கப்­பூர் உரு­வாக்­கு­வ­தில் நிலை­யான, குறு­கிய அளவை முறை கொண்டு தனித்­தி­ற­னை­யும் செயல்­தி­ற­னை­யும் வரை­ய­றுப்­பது உத­வாது என்று கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் (படம்) தெரி­வித்­துள்­ளார்.

மாறாக, ஒற்­றைத் தேர்வு அல்­லது குறிப்­பிட்ட தரு­ணத்­தைக் கொண்டு ஒரு­வ­ரின் எதிர்­கால வாழ்க்­கை­யைத் தீர்­மா­னிக்­காத வகை­யில், தகு­திக்கு முன்­னு­ரிமை அளிக்­கும் தொடர்ச்­சி­யான முறையை சிங்­கப்­பூர் கொண்­டி­ருக்க வேண்­டும் என்று அமைச்­சர் சான் வலி­யு­றுத்­தி­னார்.

நாடா­ளு­மன்­றத்­தில் அதி­பர் உரை­மீ­தான இரண்­டாம் நாள் விவா­தத்­தின்­போது, தகு­திக்கு முன்­னு­ரி­மையே சிங்­கப்­பூ­ரின் சமூ­கப் பிணைப்­பின் மைய­மா­கத் திகழ்­கிறது என்று அவர் குறிப்­பிட்­டார்.

பிறப்­பு­ரிமை, குடும்­பத் தொடர்­பு­கள் அல்­லது மர­பு­வ­ழிச் சொத்து அடிப்­ப­டை­யில் அல்­லாது, ஒரு­வ­ரது திற­மை­யின்­மூ­லம் முன்­னேற அனு­ம­திக்க வேண்­டும் என்­றார் திரு சான்.

அதே நேரத்­தில், சமு­தா­யச் சவால்­க­ளுக்­குத் தகு­திக்கு முன்­னு­ரி­மையே முழு­மை­யான தீர்­வாக அமை­யாது என்­றும் அவர் சொன்­னார்.

ஒரே­யொரு, நிலை­யான, குறு­கிய அளவை மூலம் வெற்­றியை வரை­ய­றுப்­பது சமூ­கத்­தைத் தேக்­க­ம­டை­யச் செய்­து­வி­டும் என்­றும் பொருத்­த­மில்­லா­ம­லும் ஆக்­கி­விடும் என்­றும் அமைச்­சர் சான் குறிப்­பிட்­டார்.

"சமு­தா­யம் வளர்ச்­சி­ய­டை­யும்­போது, முன்­னைய, நடப்­பி­லுள்ள அள­வை­முறை மூலம் வெற்­றி­பெற்­ற­வர்­கள், சில நேரங்­களில் அவர்­க­ளின் தனிப்­பட்ட நலன்­களை­யும் வச­தி­யை­யும் பாது­காக்­கும் நோக்­கில் அதே அள­வு­கோல்­கள் நடப்­பி­லி­ருக்க வேண்­டும் என விரும்­பக்­கூ­டும்," என்று அவர் கூறி­னார்.

ஒரு­கா­லத்­திய அள­வை­முறையை மட்­டும் பயன்­ப­டுத்தி நற்­சான்­றி­தழ் வழங்­கும் வலை­யில் சிக்­கி­வி­டக்­கூ­டாது என்று நிறு­வ­னங்­க­ளுக்­கும் சமு­தா­யத்­திற்­கும் திரு சான் வலி­யு­றுத்தி இருக்­கி­றார்.

பின்­ன­டை­வு­களில் மீண்­டெழ மக்­க­ளுக்கு வாய்ப்­ப­ளிக்க வேண்­டும் என்­றும் அவர் கேட்­டுக்­கொண்­டார்.

வாழ்­வில் வெற்­றி­பெற்ற தனி­ம­னி­தர்­கள் தங்­க­ளுக்­கென சமூக வட்­டங்­களை ஏற்­ப­டுத்­திக்­கொள்­ளக்­கூ­டும்; தங்­கள் பிள்­ளை­க­ளுக்­குச் சொத்து சேர்த்து வைத்­து­விட்­டுச் செல்­லக்­கூ­டும். அத­னால், தகு­திக்கு முன்­னு­ரிமை என்­பது காலப்­போக்­கில் சமூ­கத்­தில் பல­அ­டுக்கு நிலையை ஏற்­ப­டுத்­தி­வி­டக்­கூ­டும் என்­றும் அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

அத­னால், தகு­திக்கு முன்­னு­ரிமை என்­பது வசதி குறைந்­த­வர்­க­ளைப் பொறுத்­த­மட்­டில் கடி­ன­மா­ன­தா­கி­வி­டும் என்­றார் அவர்.

மேலும், சமூ­கத்­தின் பங்­கைக் கணக்­கில் கொள்­ளாது, ஒரு­வ­ரின் வெற்­றிக்கு அவ­ரது தனித்­தி­ற­மை­யும் கடின உழைப்­பும் மட்­டுமே கார­ணம் என்று தவ­றான நம்­பிக்கை ஏற்­ப­டக்­கூ­டிய அபா­ய­மும் உள்­ளது என்­றும் திரு சான் சொன்­னார்.

தேர்வு முடி­வு­கள், தரப்­புள்­ளி­கள் அல்­லது பட்­டக்­கல்வி, பட்­ட­யக்­கல்­விச் சான்­றி­தழ் என ஏதே­னும் ஒற்றை அள­வை­மு­றையை மட்­டும் கொண்டு மக்­க­ளின் பல­த­ரப்­பட்ட திறன்­களை மதிப்­பி­டும் முறை­யி­லி­ருந்து விலக அர­சாங்­கம் தொடர்ந்து நட­வ­டிக்கை எடுக்­கும் என்று அவர் கூறி­னார்.

தகுதி அடிப்­ப­டை­யி­லான நுழை­வுச்­சேர்க்கை போன்ற பரந்த வழி­களில் மாண­வர்­க­ளின் தங்­க­ளின் கல்­விப் பாதை­யைத் தேர்ந்­தெ­டுக்­க­லாம் என்­றார் அவர்.

வாழ்க்­கைக்­குத் தேவை­யான முக்­கி­யத் திறன்­களை மாண­வர்­கள் கற்­றுக்­கொள்ள ஏது­வாக பள்­ளி­களில் கால­மும் அதற்­கான வெளி­யும் ஒதுக்­கித் தரப்­பட்டு வரு­வ­தாக அமைச்­சர் தெரி­வித்­தார்.

வசதி குறைந்­த­வர்­க­ளைக் கைதூக்­கி­விட அர­சாங்­கம் இன்­னும் அதி­கம் செய்­யும் என்­றும் அவர் சொன்­னார்.