மசகோஸ்: சமூக முன்னேற்றத்தை நிலைநிறுத்துதல் முக்கியமானது

மசகோஸ்: சமூக முன்னேற்றத்தை நிலைநிறுத்துதல் முக்கியமானது

2 mins read
cfbba037-b037-439d-9cd8-c9a9a7e1e48e
-

தலை­மு­றை­க­ளுக்­கி­டையே சமூக முன்­னேற்­றத்­தைக் நிலை­நி­றுத்­து­தல், தேவை­யுள்­ள­வர்­க­ளைக் கைதூக்கிவிடுதல், எல்­லா­ரு­டனும் சேர்ந்து அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கும் சமு­தா­யத்தை உரு­வாக்­கு­தல் ஆகி­யவை குடும்­பங்­கள் தங்­கள் சூழ்­நி­லை­களை மேம்­ப­டுத்தி, நல்ல எதிர்­கா­லத்தை உண்­டாக்க உத­வும் என்று சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சர் மச­கோஸ் ஸுல்­கி­ஃப்லி நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

அதி­ப­ரின் உரை மீதான இரண்­டாம் நாள் விவா­தத்­தில் தமது அமைச்­சின் திட்­டங்­களை அமைச்­சர் விளக்­கி­னார்.

அப்­போது அவர், "சமூக முன்­னேற்­றம் என்­பது உலக நாடு­களுக்கு சவால்­மிக்­க­தாக உள்­ளது. வளர்ந்த நாடு­க­ளின் சமூ­கங்­கள் ஊதிய தேக்­கத்­தைச் சந்­தித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றன. மற்ற நாடு­களில் உள்ள இளை­யர்­கள், தங்­கள் பெற்­றோ­ரை­விட தாங்­கள் சிறப்­பாக முன்­னேற முடி­யும் என்­றும் தங்­கள் ஆசை­கள் நிறை­வே­றப் போகின்­றன என்றும் நம்­பு­வ­தில்லை.

"ஒற்­று­மை­யின்­மையால் அவர்­க­ளின் சமூ­கம் பிளவு படுகிறது. அத­னால் நாட்­டில் நம்­பிக்கை அற்­றுப்­போ­கிறது. அத்­து­டன் இன, சமய பிரச்­சி­னை­கள் தலை­யெ­டுக்­கும்­போது, சமூக முன்­னேற்­றம் என்­பது முடி­யாத காரி­ய­மா­கிறது. இது­போன்ற ஒரு நிலையை நாம் ஒரு­போ­தும் அனு­ம­திக்­கக்­கூ­டாது," என்று திரு மச­கோஸ் விவ­ரித்­தார்.

சிங­கப்­பூ­ரைப் பொறுத்­த­வரை, சமூக முன்­னேற்­றம் என்­பது தலை­மு­றை­க­ளைத் தாண்டி உயி­ர்ப்புடன் இருக்­கிறது. குடும்­பங்­க­ளுக்கு எப்­போ­துமே வாய்ப்­பு­களும் பிள்­ளை­க­ளுக்கு சிறப்­பான எதிர்­காலமும் உரு­வாக்­கப்­படு­வதை நோக்­க­மா­கக் கொண்ட ஒரு நாடாக சிங்­கப்­பூ­ரைப் பிர­கா­சிக்க செய்­வதே நமது நோக்­கம்.

இதன் அடிப்­ப­டை­யில். குறைந்த வரு­மான குடும்­பங்­களுக்கு உத­வு­வது குறித்த கொள்­கை­களை அர­சாங்­கம் எவ்­வாறு வலுப்­ப­டுத்த உள்­ளது என்று அமைச்சர் பட்டியலிட்டார்.

தர­மான, கட்­டுப்­ப­டி­யா­கக்­கூடிய பாலர் பள்­ளி­க­ளைக் கட்டி, அதன் மூலம் பிள்­ளை­க­ளுக்கு வலு­வான அடித்­த­ளத்தை உரு­வாக்கி, ஒரு நல்ல வாழ்க்­கைத் தொடக்­கத்தை அமைத்­துக்­

கொ­டுப்­ப­தில் அர­சாங்­கம் முத­லீடு செய்­துள்­ளது.

'கிட்ஸ்­டார்ட்' திட்­டம் மூலம் தாய்­மார்­க­ளுக்­கும் பிள்­ளை­களுக்கு அதி­கப்­ப­டி­யான உதவி­களை வழங்கி வரு­கி­றோம். 2016ல் அத்­திட்­டம் தொடங்­கப்­பட்­ட­தி­லி­ருந்து இன்­று­வரை 6,200க்கு மேற்­பட்ட பிள்­ளை­கள் பய­ன­டைந்­துள்­ள­னர்.

குறைந்த வரு­மான குடும்­பங்­க­ளுக்கு விரை­வா­க­வும் எளி­தா­க­வும் உதவி கிடைத்து, நிலைத்­தன்மை, தற்சார்­பு­நிலை, சமூக முன்­னேற்­றம் ஆகி­ய­வற்றை அடைய, வழங்­கப்­படும் சேவை­கள் குடும்­பங்­களை மைய­மா­கக் கொண்­டும் எளி­தில் கிடைக்­கக்­கூ­டியதாக இருப்பதையும் அர­சாங்­கம் உறுதி செய்ய வேண்­டும் என்­றும் அமைச்­சர் சொன்­னார்.

"ஒரு மேம்­பட்ட எதிர்­காலத்தை உரு­வாக்­கிக்­கொள்ள பல குடும்­பங்­கள் துடிப்­பான வழி­களை மேற்­கொண்டு வரு­கின்­றன. முன்­னே­றும் சிங்­கப்­பூர் கருத்­த­றி­யும் நிகழ்­வு­க­ளின்­போது, குடும்­பங்­க­ளின் தற்சார்­பு­நிலை பாதிக்­காத வகை­யில் அர­சாங்­கம் அப்­ப­டிப்­பட்ட குடும்­பங்­க­ளுக்கு ஊக்­க­ம­ளிக்க வேண்­டும் என்று சிலர் யோசனை கூறி­னர்.

"சிங்­கப்­பூ­ரில் சமூ­கங்­களை முன்­னேற்­றும் பணி­யில் மேலும் பல பங்­கா­ளி­கள் சேர்ந்­து­கொள்­ள­லாம்," என்று கூறிய அமைச்­சர், சமூக சேவை அமைப்­பு­க­ளைத் தவிர வர்த்­த­கங்­கள், அக்­கம்­பக்­கத்­தார், சமூக பங்­கா­ளி­கள் முத­லி­யோ­ரும் அவர்­களில் அடங்­கு­வர் என்­றார்.

"சமூக முன்­னேற்­றத்தை எட்­டி, அதில் சாதிக்க வேண்டுமானால் அதை அர­சாங்­கத்­தால் மட்­டும் செய்ய முடி­யாது. அனைத்­துத் தரப்­பி­ன­ரும் ஒன்­று­சேர்ந்து பங்­க­ளித்­தால்­தான் அதைச் சாதிக்க முடி­யும்," என்­றும் திரு மச­கோஸ் தமது தரையில் வலி­யு­றுத்­தி­க் கூறினார்.