தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் லியோங் மன் வாய் மீது நடவடிக்கை எடுக்கப்படாது

தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் லியோங் மன் வாய் மீது நடவடிக்கை எடுக்கப்படாது

2 mins read
3e1042e4-3beb-4257-abaa-3ee8941af6c6
-

நாடா­ளு­மன்ற நடை­மு­றை­க­ளை­யும் விதி­க­ளை­யும் மீறி­ய­தற்­காக தொகு­தி­யில்­லாத நாடா­ளு­மன்ற லியோங் மன் வாய் மீது எந்த நட­வ­டிக்­கை­யும் எடுக்­கப்­ப­டாது என்று நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

கெப்­பல் ஆஃப்ஷோர் அண்ட் மரின் நிறு­வ­னத்­தின் ஊழல் வழக்கு தொடர்­பில், கடந்த மாதம் நடை­பெற்ற நாடாளு­மன்­றக் கூட்­டத்­தின்­போது, சட்ட, உள்­துறை அமைச்­சர் கா. சண்­மு­கத்­துக்­கும் திரு லியோங்­குக்­கும் இடையே கடு­மை­யான வாக்­கு­வா­தம் இடம்­பெற்­றது. அவ்­வி­வா­தத்­தின்­போது தான் முன்­வைத்த குற்­றச்­சாட்­டைத் திரும்ப பெறு­வ­தாக திரு லியோங், அதற்கு அடுத்த நாள் தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் தெரி­வித்­தார்.

அதே வாக்­கு­வா­தத்­தின்­போது, சிங்­கப்­பூர் முன்­னேற்­றக் கட்­சி­யின் தலை­மைச் செய­லா­ள­ரான திரு லியோங், நாடா­ளு­மன்ற நாய­கர் டான் சுவான் ஜின்னைப் பார்த்து, "அமைச்­சர் என்­னி­டம் அந்­தக் கேள்­வி­யைக் கேட்­க­வில்லை என்­றால் நீங்­களும் என்­னி­டம் கேட்­கக்­கூ­டாது," என்­றார். பின்­னர் அதன் தொடர்­பில் திரு லியோங், திரு டானி­டம் மன்­னிப்பு கேட்­டார்.

இதன் தொடர்­பில் நேற்று மன்­றத்­தில் பேசிய நாடா­ளு­மன்ற அவைத் தலை­வர் இந்­தி­ராணி ராஜா, "திரு லியோங் மன்­னிப்பு கேட்­டுக்­கொண்­ட­தா­லும் தான் முன்­வைத்த குற்­றச்­சாட்டை திரும்ப பெற்­றுக்­கொண்­ட­தா­லும் அமைச்­சர்­கள் மீது அவ­நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்த தாம் ஒரு­போ­தும் எண்­ணி­ய­தில்லை என்று தெளி­வு­ப­டுத்­தி­ய­தா­லும் நாடா­ளு­மன்­றத்­தில் அவ்­வாறு நடந்­து­கொண்­டது தவறு என்று ஒப்­புக்­கொண்­ட­தா­லும், இந்த விவ­கா­ரத்­தின் மீது நட­வ­டிக்கை எடுக்க வேண்­டி­ய­தில்லை என்று முடி­வெ­டுக்­கப்­பட்­டுள்­ளது," என்று தெரி­வித்­தார்.

திரு லீ சியன் யாங், திரு­மதி லீ சுவெட் ஃபெர்ன் தொடர்­பான வழக்­கில் அமைச்­சர் சண்­மு­கம், முன்­னாள் பணிப்­பெண் பார்தி லியானி வழக்கை உதா­ர­ணம் காட்டி பேசி­யது, நீரில் சேற்றைக் கலப்பது போன்றது என்று தாம் முன்­வைத்த குற்­றச்­சாட்­டுப் பதி­வை­யும் திரு லியோங் அகற்­றி­னார்.

மேலும் அமைச்­சர் சண்­மு­க­மும் மூத்த அமைச்­சர் டியோ சீ ஹிய­னும் குற்­ற­வி­யல் நடை­முறை­க­ளுக்கு நியா­யம் கற்­பிக்க நாடா­ளு­மன்­றத்தை ஒரு தள­மா­கப் பயன்­ப­டுத்­து­கின்­ற­னர் என்று என்ற குற்றம் சாட்டுவதைப் போன்ற பதி­வை­யும் திரு லியோங் ஃபேஸ்புக்கிலிருந்து அகற்­றி­னார்.

14வது நாடா­ளு­மன்­றத்­தின் இரண்­டாம் கூட்­டத் தொடர் தொடங்­கி­யுள்ள வேளை­யில், உறுப்­பி­னர்­கள் மன்­றத்­துக்கு உள்­ளே­யும் வெளி­யே­யும் நாடாளு­மன்ற விதி­மு­றை­க­ளுக்கு உட்­பட்டு நடந்­து­கொள்­ளு­மாறு அவைத் தலை­வர் என்ற முறை­யில் குமாரி இந்­தி­ராணி கேட்­டுக்­கொண்­டார்.