'எதிர்த்தரப்பு பரிந்துரைகள் ஏன் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை'

'எதிர்த்தரப்பு பரிந்துரைகள் ஏன் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை'

2 mins read
030ed788-d050-41b9-bbe4-37a39f3b2f6f
-

தங்­க­ளது பரிந்­து­ரை­கள் பெரும்­பான்மை மக்­க­ளைத் திருப்­திப்­படுத்­தும் விதத்­தில் இருப்­ப­தா­க­வும் அதில் சில சம­ர­சங்­க­ளுக்கு இட­ம­ளித்­துள்­ள­தா­க­வும் அர­சாங்­கம் கூறு­வதை எதிர்க்­கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் நேற்று நிரா­க­ரித்­தனர்.

பாட்­டா­ளிக் கட்சி எப்­போ­துமே மாற்­றுக் கொள்­கை­களை தங்­கள் தேர்­தல் அறிக்­கை­யில் கூறி­வந்­துள்­ளது, அதையே கடைப்­பி­டித்து வந்­துள்­ளது. ஆனால், ஆளும் மக்­கள் செயல் கட்­சியோ அதன் உறு­தி­மொ­ழி­களுக்கு மாறாக நடந்­து­கொள்­கிறது.

குறிப்­பாக சொல்­லப்­போ­னால், அது நடை­மு­றைப்­ப­டுத்த நினைக்­கும் பணி­நீக்­கக் காப்­பீட்டுத் திட்டம் என்று அல்­ஜு­னிட் குழுத் தொகு­தி­யின் பாட்­டா­ளிக் கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் லியோன் பெரேரா கூறி­னார்.

"இது பற்றி துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங்­குக்­கும் மக்­கள் செயல் கட்­சிக்­கும் தெரி­யும். நமது அர­சி­யல் விவா­தங்­களை நேர்­மை­யாக எதிர்­கொள்­வோம். அதை விடுத்து பேச்­சுத் திற­மை­யால் எதிர்த்­த­ரப்­பி­னரை ஒதுக்­கித் தள்­ள­வேண்­டாம்," என்று திரு பெரேரா கேட்­டுக்­கொண்­டார்.

துணைப் பிர­த­மர் வோங் நேற்று முன்­தி­னம் மன்­றத்­தில் உரை­யாற்­றி­போது, எதிர்­கட்­சி­கள் சிறப்­பான மாற்­றுக்கொள்­களை­யும் யோச­னை­க­ளை­யும் கூற வேண்­டும். மாறாக, மாற்­றுக்­க­ருத்து என்ற போர்­வை­யில் அர­சாங்­கத்­தின் மீது மக்­கள் வைத்­தி­ருக்­கும் நம்­பிக்­கையை சிறிது சிறி­தாக குறைக்க முற்­பட வேண்­டாம் என்று தெரி­வித்­த­தற்கு, திரு பெரேரா தமது கட்சி சார்­பில் பதி­ல­ளித்­தார்.

"எடுத்த எடுப்­பி­லேயே எதிர்த்­த­ரப்பை நேர்­மை­யற்­றது என்று முத்­தி­ரை­யி­டு­வ­தற்­குப் பதி­லாக, ஏன் எங்­கள் பரிந்­து­ரை­கள் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டு­வ­தில்லை என்ற கார­ணத்தை விளக்­கு­வ­தில் கவ­னம் செலுத்த வேண்­டும்," என்­றார் திரு பெரேரா.

"நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் எதிர்­கட்­சி­யி­னர் உட்­பட ஒரு­வர் மற்­ற­வ­ரின் கருத்­து­களுக்கு மதிப்­ப­ளிக்க வேண்­டும் என்­றும் அதில் உண்மை இருந்­தால் அதை ஏற்­றுக்­கொள்­ளும் பக்­கு­வம் இருக்க வேண்­டும். மாறாக, ஒட்­டு­மொத்­த­மாக எதிர்­கட்­சி­கள் நேர்­மை­யற்­றவை என்று வகைப்­ப­டுத்­து­வது நியாய­மற்­றது.

"இப்­ப­டிப்­பட்ட நியா­ய­மற்ற வகைப்­ப­டுத்­து­த­லால் மாற்­றுக் கருத்­து­கள் மிரட்­டல் விடுப்­ப­தாக எடுத்­துக்­கொள்­ளப்­ப­டு­மா­னால், அது ஆரோக்­கி­ய­மான விவா­தத்­துக்­குத் தடை­யாக இருக்­கும்," என்று திரு பெரேரா, விவ­ரித்­தார்.