உபின் தீவில் இறந்த தீயணைப்பு வீரரின் உடல் இன்று நல்லடக்கம்

உபின் தீவில் இறந்த தீயணைப்பு வீரரின் உடல் இன்று நல்லடக்கம்

3 mins read
0df2cd8c-31fd-46e6-b07b-f93a4ada0516
-

மோன­லிசா

வெள்ளை நிற திரைச்­சீ­லை­க­ளா­லும் மலர்­க­ளா­லும் அலங்­க­ரிக்­கப்­பட்ட கூடத்­தின் நடு­வில் தெய்­வீக சாய­லில் புன்­னகை பூத்­தது ரய­னின் புகைப்­ப­டம். அதற்­குப் பின்­னால் இருந்த சவப்­பெட்­டி­யி­னுள் கலைக்­க­மு­டி­யாத நிரந்­தர நித்­தி­ரை­யில் இருந்­தார் அண்­மை­யில் உபின் தீவின் குவாரி ஒன்­றில் காணா­மல்­போன தீய­ணைப்பு வீர­ரான 22 வயது ரயன் சபா­பதி.

தெம்­ப­னிஸ் தீய­ணைப்பு நிலை­யத்­தில் முழு­நேர தேசிய சேவை­யா­ள­ராக சேவை­யாற்றி வந்த ரயன் கடந்த வெள்­ளிக்­கி­ழமை நண்­பர்­க­ளு­டன் ஒரு­நாள் சுற்­று­லா­வாக உபின் தீவிற்­குச் சென்ற­போது காணா­மல் போனார். தீய­ணைப்பு வீரர் காணா­மல்­போன சம­யத்­தில் அவர் பணி­யில் இல்லை.

சனிக்­கி­ழமை அதி­காலை 12.33 மணிக்கு சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை­யின் உத­வியை நாடி­ய­தை­ய­டுத்து அதி­காரி­கள் தேடு­தல் பணி­யில் ஈடு­பட்­ட­னர். பின்­னர் ஞாயிற்­றுக்­கிழமை (ஏப்­ரல் 16) பிற்­ப­கல் 1 மணி­ய­ள­வில் கெக்­கெக் குவா­ரி­யி­லி­ருந்து ரயனின் சட­லம் மீட்­கப்­பட்­டது. முதல்­கட்ட விசா­ர­ணை­யின் முடி­வில் இவ­ரின் மர­ணத்­தில் சூது இருப்­ப­தா­கத் தெரி­ய­வில்லை என்று அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

கடந்த ஓராண்­டுக்­கும் மேலாக ரய­னின் மேல­தி­கா­ரி­யா­க­வும் உற்ற நண்­ப­ரா­க­வும் இருந்த அஹ்­மத் அப்­துல்லா, 19, "சென்ற வாரம் சமூக நிகழ்வு ஒன்­றில் நாங்­கள் இரு­வரும் தொண்­டூ­ழி­ய­ராக கலந்­து­கொண்­டோம். மிகுந்த உற்­சா­கத்­து­டன் காணப்­பட்ட அவரை நான் காண்பது அதுவே கடைசி முறை­யாக இருக்கும் என அப்போது எனக்­குத் தெரி­யாது," என்று கண்­களில் நீர்­பெ­ருகக் கூறி­னார் திரு அஹ்­மத்.

அனை­வ­ரி­டத்­தி­லும் இன்­முகத்­து­டன் பழ­கக்­கூ­டிய ரயன் கோபப்­பட்டு தான் கண்­ட­தில்லை என்­றும் பணி­யில் அழுத்­த­மும் பிரச்­சி­னை­களும் ஏற்­படும் சூழ­லில்­கூட நிதா­ன­மா­க­வும் தெளிவு­ட­னும் முடி­வெ­டுத்து செயல்­படக்­கூ­டி­ய­வர் என்­றும் திரு அஹ்மத் கூறி­னார்.

"என் மன­தில் தாங்க முடி­யாத துக்­க­மும் நிறைய கேள்­வி­களும் இருக்­கின்­றன. இத்­த­கைய துய­ரைச் சந்­திக்­கும் அள­விற்கு நான் என் வாழ்­வில் யாருக்கு என்ன தீங்கு இழைத்­தேன். இப்­போ­தைக்கு ஒரு தாயாக என் மக­னின் இறு­திச்­ச­டங்கை நன்­மு­றை­யில் நடத்­து­வ­திலே நான் கவ­னம் செலுத்த வேண்­டும். அதன் பிறகு தனி­மை­யிலே இறை­வ­னி­டத்­தில் என் கேள்­விக்­கான பதில்­களைத் தேடுவேன்," என்று கூறும்­போதே உடைந்து அழு­தார் ரயனின் தாயார்.

ரயனிற்கு விலங்­கு­கள் மீது அலாதிப் பிரி­யம் உண்டு. தன்­னு­டைய செல்­லப்­பி­ரா­ணி­யான பூனை­யு­டன் அதிக நேரம் செல­வி­டு­வார். மனி­தர்­க­ளைப் போலவே விலங்­கு­க­ளுக்­கும் மரங்­க­ளுக்­கும் கூட இவ்­வு­ல­கில் வாழ சம­வு­ரிமை உண்டு என்று கூறிய ரயன், விரை­வில் இன்­னொரு பூனையை வளர்க்க இருந்­த­தா­க­வும் கனத்த இத­யத்­து­டன் நினை­வு­க­ளைப் பகிர்ந்­தார் ரயானின் தாயார்.

இளம் வய­தி­லி­ருந்தே துடிப்­புடன் காணப்­பட்ட ரயனிற்கு வீர தீர சாக­சங்­கள் மீது அதிக ஈடு­பாடு இருந்­த­தா­க­வும் ஸ்கேட்­டிங், நீச்­சல் உள்­ளிட்ட பல்­வேறு பயிற்சி­கள் பெற்­றி­ருந்­ததாகவும் அவரின் தாயார் குறிப்­பிட்­டார். மேலும் தீய­ணைப்­புத் துறை­யில் வேலை பார்ப்­பதை அவர் பெரு­மி­த­மா­கக் கரு­தி­னார் என்­றும் அவரின் தாயார் கூறி­னார்.

ரயன் கித்­தார் வாசிக்­கும் கலை­ஞர் ஆவார். தானே மெட்டு­அமைத்து பாடல்­வ­ரி­கள் இயற்றி பாடும் திறமை படைத்­த­வர். எத்­த­னையோ இர­வு­கள் ரயனு­டன் பல நீண்ட உரை­யா­டல்­க­ளின்­போது அவர் கித்­தார் வாசித்து பாடல்­கள் பாடிய தரு­ணங்­க­ளை­யும் அவ­ரு­டைய நண்­பர்­கள் நினை­வு­கூர்ந்­த­னர்.

எதிர்­கா­லத்­தில் ஒரு சிறந்த இசைக் கலை­ஞ­ராக உரு­வெ­டுக்க வேண்­டும் என்ற வேட்­கை­யும் இசை­யின் ஆளு­மையை உல­க­ம­றி­யச் செய்­யும் ஒரு சிறு கரு­வி­யாக தான் இருக்க வேண்­டும் என்ற எண்­ண­மும் ரயனிற்கு இருந்­த­தா­க­வும் அவ­ரு­டைய உற­வி­னர் ஒரு­வர் தெரி­வித்­தார்.

ரயனின் இறு­திச்­ச­டங்கு இன்று (புதன்­கி­ழமை) மதி­யம் 3 மணிக்கு அவ­ரு­டைய இல்­லத்­தில் தொடங்கி 4.30 மணிக்கு அவ­ரு­டைய நல்­லு­டல் சுவா சூ காங் இடுகாட்டில் நல்­ல­டக்­கம் செய்­யப்­ப­ட­வுள்­ள­தாக குடும்­பத்­தார் தெரி­வித்­த­னர்.