எஃப்1: விலை உயர்ந்தும் மூன்று நாள் நுழைவுச்சீட்டுகள் விற்றுத் தீர்ந்தன

எஃப்1: விலை உயர்ந்தும் மூன்று நாள் நுழைவுச்சீட்டுகள் விற்றுத் தீர்ந்தன

1 mins read
eb54a2f0-d903-4343-9dad-af62dd5805de
-

2023 எஃப்1 கார் பந்­த­யத்­துக்­கான ஆகப் பிரத்­தி­யேக நுழைவுச்­சீட்­டு­க­ளின் விலை, 2008க்குப் பிறகு முதன்­மு­றை­யாக ஐந்து இலக்க எண்ணை எட்­டி­யுள்­ளது. மூன்று நாள் 'பெடோக் கிளப்' நுழை­வுச்­சீட்­டு­கள், இவ்­வாண்டு $11,016க்கு விலை­போ­யின. கடந்த ஆண்­டின் விலை­யை­விட ($9,898) இது 10 விழுக்­காட்­டிற்­கு­மேல் அதிகம். 2019ல் இந்த நுழை­வுச்­சீட்டு­களின் விலை $9,500ஆக இருந்­தது.

கொவிட்-19 பெருந்­தொற்று கார­ண­மாக 2020லும் 2021லும் எஃப்1 நடை­பெ­ற­வில்லை.

விலை உயர்ந்­த­போ­தி­லும், இந்த மூன்று நாள் நுழை­வுச்­சீட்டு­கள் அனைத்­தும் விற்­றுத் தீர்ந்­து­விட்­ட­தாக எஃப்1 ஏற்­பாட்­டா­ளர் சிங்­கப்­பூர் ஜிபி தெரி­வித்­தது. வெள்­ளிக்­கி­ழமை, சனிக்­கி­ழ­மைக்­கான ஒரு­நாள் நுழை­வுச்­சீட்­டு­கள் மட்­டும் குறிப்­பிட்ட எண்­ணிக்­கை­யில் இருப்­ப­தாக அது கூறி­யது.

இதற்­கி­டையே, சில பிரி­வு­களில் நுழை­வுச்­சீட்டு விலை­யில் மாற்­றம் செய்­யப்­பட்­டுள்­ளன. ஐந்து நுழை­வுச்­சீட்­டுப் பிரி­வு­களில் விலை 20 விழுக்­காடு வரை குறைந்­துள்­ளது. பதி­னேழு பிரி­வு­களில் விலை கடந்த ஆண்­டில் இருந்­த­தைப்­போல உள்­ளது. கடந்த ஆண்­டின் எஃப்1 பந்­த­யம் 302,000 பார்­வை­யா­ளர்­களை ஈர்த்து புதிய சாதனை படைத்­தது. ஒப்­பு­நோக்க, 2008ல் நடை­பெற்ற முதல் இர­வு­நேர பந்­த­யம் 300,000 பேரை ஈர்த்­தது.