தீங்கிழைக்கும் மென்பொருள்: கைப்பேசிகளுக்கு தொடரும் தொல்லை

தீங்கிழைக்கும் மென்பொருள்: கைப்பேசிகளுக்கு தொடரும் தொல்லை

2 mins read
657714ee-b846-4809-9605-ac0056690603
-

பல்­வேறு வழி­கள் மூலம் மக்­கள் தங்­க­ளது கைப்­பே­சித் தர­வு­களை விட்­டுக்­கொ­டுக்­கும் அபா­யம் நிலவு­கிறது.

சட்­ட­வி­ரோ­த­மாக மாற்­றி­ய­மைக்­கப்­பட்ட மின்­னூட்ட முனை­கள், யுஎஸ்பி கம்­பி­வ­டங்­கள் மூலம் தர­வு­கள் கள­வா­டப்­ப­ட­லாம்.

சிங்­கப்­பூர் இணை­யப் பாது­காப்பு அமைப்­பும் காவல்­து­றை­யும் நேற்று முன்­தி­னம் வெளி­யிட்ட கூட்டு ஆலோ­சனை அறிக்­கை­யில் இத­னைத் தெரி­வித்­தன.

தர­வு­கள் பறி­போ­வது அல்­லது கைப்­பே­சிகளில் தீங்­கு­நி­ரல் (malware) செலுத்­தப்­ப­டு­வ­தற்­கான நான்கு வழி­களை அவை கோடிட்­டுக் காட்­டின.

மோசடி 'வைஃபை' இணைய வச­தி­க­ளு­டன் கைய­டக்­கச் சாத­னங்­கள் இணை­யும்­போ­தும் சாத­னத்­தின் கோப்புப் பகிர்வு செயல்­பா­டு­கள் பாது­காக்­கப்­ப­டா­த­போதும் புளூ­டூத் இணைப்­பு­மற்றும் 'ஜூஸ் ஜேக்­கிங்' முறை மூலம் தர­வு­கள் கள­வா­டப்­ப­ட­லாம்.

கைய­டக்­கச் சாத­னங்­க­ளில் தீங்­கு­நி­ர­லைச் செலுத்த அல்­லது தர­வு­க­ளைத் திருட, மின்­னூட்ட முனை­கள் அல்­லது யுஎஸ்பி கம்பி­வ­டங்­களை இணை­யக் குற்ற­வா­ளி­கள் சட்­ட­வி­ரோ­த­மாக மாற்றி­ய­மைப்­பதை 'ஜூஸ் ஜேக்­கிங்' குறிக்­கிறது.

விமான நிலை­யங்­கள், கடைத்­தொ­கு­தி­கள், ஹோட்­டல்­களில் மின்­னூட்ட முனை­க­ளைப் பயன்­படுத்த வேண்­டாம் என ஏப்­ரல் 6ஆம் தேதி அமெ­ரிக்­கா­வின் மத்­திய புல­னாய்­வுத் துறை பய­னீட்­டா­ளர்­க­ளி­டம் கேட்­டுக்­கொண்­டது.

பொது மின்­னூட்ட நிலை­ய­மாக இருக்­கட்­டும், பொது 'வைஃபை' வச­தி­யாக இருக்­கட்டும், கைய­டக்­கச் சாத­னத்­தில் தீங்­கு­நி­ர­லைச் செலுத்தும் ஆபத்து எப்போதும் உள்ளதாக 'பாலோ ஆல்டோ நெட்­வொர்க்ஸ்' துணைத் தலை­வர் ஷான் டுக்கா கூறி­னார்.

தங்­க­ளது சாத­னங்­களை இணைக்­கும்­போது பய­னீட்­டா­ளர்­கள் எப்­போ­தும் கவ­ன­மாக இருக்க வேண்­டும் என்று அவர் அறி­வு­றுத்­தி­னார்.

பொது இடங்­களில் சாத­னங்­களை மின்­னூட்­டம் செய்­வ­தற்கு முன்பு, தானி­யக்க முறை­யில் கோப்­பு­களை மாற்­றி­வி­டும் வச­தியை நிறுத்­தி­வைத்து, சாத­னங்­களை அணைத்­து­விட பய­னீட்­டாளர்­கள் ஊக்­கு­விக்­கப்­ப­டு­கின்­ற­னர்.

'ஆன்டிவைரஸ்' மென்­பொருள்­களை நிறு­வு­வது, அதி­கா­ர­பூர்வ முறை­யில் செய­லி­களைப் பதிவிறக்­கம் செய்­வது, வலு­வான மறைச்­சொற்­க­ளைப் பயன்­படுத்துவது, நம்­பகமான மூலங்­களில் இருந்து வரும் இணைப்பு­களை மட்­டும் சொடுக்­கு­வது உள்­ளிட்­டவை இதர நடை­மு­றை­களா­கும்.