4ஜி தலைவர்களுக்கு ஆதரவு அளியுங்கள்

4ஜி தலைவர்களுக்கு ஆதரவு அளியுங்கள்

2 mins read
f6201521-9710-47aa-a32b-7fe86e57a73c
-

சிங்­கப்­பூர் கடந்த பல ஆண்­டு­களாக அனைத்­து­லக ரீதி­யில் வலு­வா­ன­தொரு நற்­பெ­ய­ரைப் பெற்­று­வ­ரு­கிறது. மக்­க­ளின் ஆத­ரவை­யும் நம்­பிக்­கை­யை­யும் நாட்­டுத் தலை­வர்­கள் பெற்­றி­ருக்­கும் அதேவேளை தங்­க­ளின் வாக்­குறுதி­களை அத்­த­லை­வர்­கள் நிறை­வேற்­றி­யும் வரு­கின்­ற­னர் என மக்­கள் அறிந்­தி­ருப்­பது இதற்­குக் கார­ணம் என்று பிர­த­மர் லீ சியன் லூங் தெரி­வித்­துள்­ளார்.

இத­னால் நல்ல முத­லீ­டு­களை நாடு ஈர்த்­துள்­ள­து­டன் உல­கின் ஆக உயர்ந்த வாழ்க்­கைத்­த­ரங்­களில் ஒன்­றினை சிங்­கப்­பூ­ரர்­கள் அனு­ப­விக்க முடி­வ­தா­க­வும் திரு லீ குறிப்­பிட்­டார்.

இருப்­பி­னும் சிங்­கப்­பூ­ருக்­கு­ரிய இந்த அடை­யா­ளத்­தைச் சாதார­ண­மாக எடுத்­துக்­கொள்ள வேண்­டாம் என்று அவர் மக்­க­ளைக் கேட்­டுக்­கொண்­டுள்­ளார்.

பொரு­ளி­யல் வலு­வாக இருத்­தல், அமைப்­பு­மு­றை­கள் நடப்­பில் இருத்­தல், மக்­கள் ஒற்­று­மை­யாக இருத்­தல், இருப்­பு­கள் நன்கு நிர்­வ­கிக்­கப்­பட்டு கட்­டிக்­காக்­கப்­ப­டு­தல் ஆகிய அம்­சங்­கள்­வழி நாடு சரி­யான பாதை­யில் செல்­வதை உறு­திப்­ப­டுத்­த­லாம் என்­றார் அவர்.

இவை யாவும் அமைந்­திட திறன்­வாய்ந்த, அர்ப்­ப­ணிப்­பு­மிக்க, நம்­ப­க­மான வகை­யில் தலை­வர்­கள் இருத்­தல் முக்­கி­யம் என்று குறிப்­பிட்­டார் பிர­த­மர். மக்­கள் செயல் கட்­சி­யின் நான்­காம் தலை­முறை தலைத்­து­வக் குழு­வுக்­கும் அதன் தலை­வ­ரும் துணைப் பிர­த­ம­ரு­மான லாரன்ஸ் வோங்­குக்கு மக்­கள் தங்­கள் ஆத­ரவை வழங்­கு­மாறு தொடர்ந்து திரு லீ அறை­கூ­வல் விடுத்­தார்.

உக்­ரேன் போர், மோச­ம­டைந்­து­வ­ரும் அமெ­ரிக்க சீனா உறவு, நெருக்­க­டிக்கு உள்­ளா­கி­யி­ருக்­கும் உலக வர்த்­தக அமைப்­பு­முறை போன்­ற­வற்­றால் சிங்­கப்­பூ­ருக்கு ஏற்­ப­டக்­கூ­டிய பாதிப்பு குறித்து சுட்­டிய பிர­த­மர் லீ, இவ்­வாறு நாளுக்கு நாள் ஆபத்து அதி­கரித்­த­வண்­ணம் அமைந்த உலகை சிங்­கப்­பூர் நன்­மு­றை­யில் கையாள்­வ­தற்கு நாட்டு அர­சாங்­கத்­தின் தரம் ஒரு முக்­கிய அம்­சம் என்­றார்.

சிங்­கப்­பூர் அமைப்­பு­முறை நன்கு செயல்­ப­டு­வதை மக்­கள் அறிந்­தி­ருப்­ப­தால் காலப்­போக்­கில் சிங்­கப்­பூர் நல்ல பெய­ரை­யும் நிலை­யை­யும் பெற்­றுள்­ள­தாக அவர் கூறி­னார்.

கொவிட்-19 கொள்­ளை­நோயை அர­சாங்­கம் கையாண்ட விதம், மேலும் சான்று பகர்­வதாக அவர் கூறி, கிருமி நெருக்­க­டி­யைச் சமா­ளிப்­ப­தில் 4ஜி குழு முக்­கிய அங்­கம் வகித்­த­தைக் குறிப்­பிட்­டார்.

வலு­வான தலை­மைத்­து­வத்­தால் மக்­கள் மீள்திறனு­டன் செயல்­பட்­ட­னர் என்­றும் பொதுத் துறையினர் தலை­சி­றந்த முறை­யில் பங்­காற்­றி­னர் என்­றும் அவர் கூறி­னார்.

சிங்­கப்­பூர் தான் கொண்­டுள்ள கடப்­பா­டு­களை நிறை­வேற்­று­வ­து­டன் தொடர்ச்­சி­யா­கக் கடைப்­பி­டிக்­கப்­படும் கொள்­கை­களின் அடிப்­ப­டை­யில் செயல்­பட்­டும் வரு­கிறது என்­றார் பிர­த­மர் லீ. தேர்­த­லுக்குத் தேர்­தல் கொள்­கை­கள் மீட்­கப்­ப­டு­வது இல்லை என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

அனைத்­து­லக விவ­கா­ரங்­கள் குறித்து சிங்­கப்­பூ­ரர்­கள் பய­னுள்ள பங்­க­ளிப்­பு­கள் ஆற்­றி­யுள்­ளது தொடர்­பி­லும் அவர் பேசி­னார்.

தண்­ணீர் ஆளு­மைக்­கான அனைத்­து­லக ஆணை­யத்­தின் தலை­வர்­க­ளுள் ஒரு­வ­ராக மூத்த அமைச்­சர் தர்­மன் சண்­மு­க­ரத்னம் இருப்­பதை இதற்கு உதா­ர­ணமாகக் காட்­டி­னார்.

நாட்­டின் பாது­காப்­புக்­கும் நல­னுக்­கும் நாளுக்கு நாள் கூடு­தல் பொறுப்பு வகிக்­கும் நிலை­யில் 4ஜி தலை­வர்­கள் உள்­ள­தா­கக் கூறிய அவர், நாட­ள­வி­லும் அனைத்­து­லக அள­வி­லும் நிறை­வேற்ற 4ஜி குழு­வுக்கு உறு­தி­யான திட்­டங்­கள் உள்­ளன என்­றார். இருப்­பி­னும் அக்­குழு தனித்­துச் செயல்­பட முடி­யாது என்று சுட்­டிய அவர், இத்­திட்­டங்­கள் நிறை­வேற மக்­க­ளின் ஆத­ர­வைக் கோரி­னார்.

"நம்மை முன்­னெ­டுத்­துச் செல்­லக்­கூ­டி­ய­வர்­கள் என நீங்­கள் நம்­பு­வோ­ரை தலை­வர்­க­ளா­கத் தேர்ந்­தெ­டுங்­கள்," என்று அறி­வு­றுத்­தி­னார் பிர­த­மர் லீ.