கார்களுக்கான 'சிஓஇ' கட்டணம் புதிய உச்சத்தைத் தொட்டது

கார்களுக்கான 'சிஓஇ' கட்டணம் புதிய உச்சத்தைத் தொட்டது

1 mins read
4abd313f-c2aa-4497-a900-7ae89a744ea0
சிறிய கார்­க­ளுக்­கான வாகன உரி­மைச் சான்­றி­தழ் கட்­ட­ணம் (சிஓஇ) முதன்­மு­றை­யாக 100,000 வெள்­ளி­யைத் தாண்­டி­யது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிறிய கார்­க­ளுக்­கான வாகன உரி­மைச் சான்­றி­தழ் கட்­ட­ணம் (சிஓஇ) முதன்­மு­றை­யாக 100,000 வெள்­ளி­யைத் தாண்­டி­யது.

புதன்­கி­ழமை நடந்த ஏலக்­குத்­த­கை­யில் 1,600 சிசி வரை இயந்­தி­ரக் கொள்­தி­றன் கொண்ட சிறிய கார்­க­ளுக்­கும் 110 கிலோ­வாட் வரை­யி­லான திறன்­கொண்ட மின்­சார வாகனங்­க­ளுக்­கு­மான சிஓஇ கட்­டணம் 103,7121 வெள்ளி­யாக உயர்ந்­தது.

இது, முந்­திய சாத­னைக் கட்­ட­ண­மான 96,501 வெள்­ளி­யை­விட 7.48 விழுக்­காடு அதி­கம்.

அது­போல், பெரிய கார்­கள் மற்­றும் பொதுப் பிரிவு வாகனங்­களுக்­கான சிஓஇ கட்­ட­ணங்­களும் புதிய உச்­சம் தொட்­டன.

பெரிய கார்­க­ளுக்­கும் அதி­கத் திறன்­கொண்ட மின்­சார வாக­னங்­க­ளுக்­கு­மான சிஓஇ கட்­டணம் $120,889ஆக ஏற்­றம் கண்­டது. இரு வாரங்­க­ளுக்கு முந்­திய ஏலக்­குத்­த­கை­யில் இக்­கட்­ட­ணம் $118,501ஆகப் பதி­வானது.

பொதுப் பிரிவு வாக­னங்­களுக்­கான சிஓஇ கட்­ட­ணம், இரு வாரங்­க­ளுக்கு முந்­திய ஏலக்­குத்­த­கை­யை­விட நேற்­றைய ஏலக்­குத்­த­கை­யில் 4.63 விழுக்­காடு கூடி, $124,501 எனப் புதிய உச்­சம் தொட்­டது. வேன், லாரி, சரக்­கு வாகனங்கள் போன்­ற­வற்றை உள்­ள­டக்­கிய வணி­கப் பிரிவு வாக­னங்­க­ளுக்­கான சிஓஇ கட்­ட­ணம் 1.91% குறைந்­தது. கடந்த ஏலக்­குத்­தகை­யில் இவ்­வகை வாக­னங்­களுக்­கான சிஓஇ கட்­ட­ணம் $76,901 எனப் பதி­வான நிலை­யில், நேற்று அது $75,334 எனக் குறைந்­தது.

அண்­மைய ஏலக்­குத்­த­கை­யில் இப்­பி­ரி­வில் மட்­டுமே சிஓஇ கட்­டணம் குறைந்­தது.

மோட்­டார்­சைக்­கி­ளுக்­கான சிஓஇ கட்­ட­ணம் 1.48% கூடி, $12,179ஆக அதி­க­ரித்த்து.