புயலில் 14 மரங்கள் வேரோடு சாய்ந்தன

புயலில் 14 மரங்கள் வேரோடு சாய்ந்தன

1 mins read
781050f8-066e-4858-b5d9-44827e0b2806
-

ஞாயி­றன்று சாங்கி கடற்­க­ரைப் பூங்­கா­வில் புயல் கார­ண­மாக 14 மரங்­கள் வேரோடு சாய்ந்­தன. அத்­து­டன், மேலும் ஆறு மரங்­கள் சேத­ம­டைந்­தது.

இதைத் தெரி­வித்த தேசிய பூங்­காக் கழ­கம் கடந்த ஞாயி­றன்று பிற்பகல் கிட்­டத்­தட்ட 4.00 மணிக்கு புயல் கார­ண­மாக சாங்கி கடற்­க­ரைப் பூங்­கா­வில் அந்த மரங்­கள் சாய்ந்­த­தா­கக் கூறி­யது.

மேலும் ஆறு மரங்­கள் சேத­

ம­டைந்­ததாக தனக்­குத் தக­வல் கிடைத்­த­தா­க­வும் கழ­கம் கூறி­யது.

எனி­னும், புய­லில் எவ­ரும் காய­ம­டை­ய­வில்லை என்று கழ­கம் தெரி­வித்­தது.

தற்­பொ­ழுது சாய்ந்த மரங்­களை அகற்­றும் பணி­யில் கழ­கம் ஈடு­பட்­டுள்­ளது.

புய­லில் சாய்ந்த மரங்­களில் சாலை­யோ­ரங்­களில் பிர­ப­ல­மாக காணப்­படும் மஞ்­சள் பூக்­க­ளைக் கொண்ட மரங்­களும் 25 மீட்­டர் உய­ரம் வள­ரக்­கூ­டிய 'இந்­தி­யன் பீச்' எனப் பெயர் கொண்ட மரங்­களும் அடங்­கும்.

இது பற்­றிக் கருத்­துை­ரத்த தேசிய பூங்­காக் கழக இயக்கு

நரான சியா செங் ஜியாங், பூங்கா தடங்­ளுக்கு குறுக்கே விழுந்த மரங்­கள் அகற்­றப்­பட்டு விட்­ட­தாக விளக்­கி­னார்.

இதில் மற்ற மரங்­களும் ஆய்வு செய்­யப்­பட்டு வரு­வ­தா­கக் கூறி­னார். பொது­மக்­கள் பாது­காப்­புக்கு ஆபத்து விளை­விக்­கக்­கூ­டிய நிலை­யில் இருந்­தால் அவை அகற்­றப்­படும் என்­றும் திரு சியா தெரி­வித்­தார்.