மாது ஒருவர் தனது முன்னாள் தோழியுடனான நட்பை முறித்தக்கொண்டு அவரை இனி பார்க்கப் போவதில்லை என்று முடிவெடுத்த பின்னரும் அந்தத் தோழி விடாமல் அந்த மாதுக்கு தொல்லை கொடுத்து வந்தார்.
அவரைப் பின்தொடர்வது, தினந்தோறும் பல முறை தொலைபேசியில் அழைத்து அந்த மாது தனது கைப்பேசியைப் பயன்படுத்த முடியாமல் செய்வது எனப் பல வழிகளிலும் முன்னாள் காதலி தொல்லை கொடுத்தார். ஒரு முறை வலுக்கட்டாயமாக மாதைப் பிடித்து தன்னுடனான நட்பை தொடரச் சொல்லி மிரட்டினார் அந்த முன்னாள் தோழி.
இந்த வழக்கில் முன்னாள் தோழிக்கு $5,000 அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

