வருங்காலத் தலைமுறைக்காக முதலீடு செய்யவேண்டும்

வருங்காலத் தலைமுறைக்காக முதலீடு செய்யவேண்டும்

2 mins read
e54ec311-1c79-4f38-bcb0-cb370ee27cce
-

சிங்கப்பூரின் நீடித்த நிலைத்தன்மையை உறுதிசெய்வது குறித்து அமைச்சர் கிரேஸ் ஃபூ

பரு­வ­நிலை மாற்­றத்­தின் தாக்­கத்­தைத் தணிக்­கும் வகை­யில் சிங்­கப்­பூர் அதன் உள்­கட்­ட­மைப்­பில் நீண்­ட­கால அடிப்­ப­டை­யி­லான முத­லீ­டு­க­ளைச் செய்­து­வ­ரு­கிறது. அதே­வே­ளை­யில் உண­வுப் பாது­காப்­பி­லும் அது கவ­னம் செலுத்­து­கிறது.

வருங்­கா­லத் தலை­மு­றை­யி­ன­ருக்கு நிதி வளங்­களை ஒதுக்­கு­வ­தற்கு தற்­கால சிங்­கப்­பூ­ரர்­கள் மேற்­கொள்­ளும் முயற்­சி­களை இவை பிர­தி­ப­லிக்­கின்­றன என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ கூறி­யுள்­ளார்.

இதுவே தலை­மு­றை­க­ளுக்கு இடை­யி­லான சமூக இணக்­கம் எனும் கோட்­பாடு என்று நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று அவர் கூறி­னார்.

சிங்­கப்­பூர், வருங்­கா­லத் தலை­மு­றை­யி­ன­ருக்கு நீடித்த நிலைத்­தன்­மை­யுள்ள இட­மாக விளங்­கு­வதை உறு­தி­செய்ய, நாட்­டின் சமூக இணக்­கத்தை மூன்று அம்­சங்­களில் வலுப்­ப­டுத்த வேண்­டி­யது அவ­சி­யம் என்­றார் அமைச்­சர்.

முத­லா­வது, மற்­ற­வர் நல­னுக்­காக ஒவ்­வொரு தனி­ம­னி­த­ரும் கொண்­டி­ருக்க வேண்­டிய கட­மை­களும் பொறுப்­பு­களும்.

இரண்­டா­வது, சமூ­கத்­தின் சிக்­க­லான பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்­வு­காண இணைந்து பணி­யாற்­று­வ­தில் பல்­வேறு குழுக்­க­ளின் பங்கு.

மூன்­றா­வது, வருங்­கா­லத் தலை­மு­றை­யி­ன­ருக்கு தற்­போ­துள்­ள­வர்­கள் வளங்­களை ஒதுக்­கு­தல் என்­றார் அமைச்­சர்.

"பரு­வ­நிலை மாற்­றத்­தின் முழுத் தாக்­கத்­தை­யும் நாம் உண­ரப் போவ­தில்லை என்­ற­போ­தும் அடுத்­த­டுத்த தலை­மு­றை­யி­ன­ரின் ஒளி­ம­ய­மான வருங்­கா­லத்தை உறு­தி­செய்ய நாம் முத­லீடு செய்ய வேண்­டி­யது அவ­சி­யம் என்­பது தெளி­வா­கிறது.

"எடுத்­துக்­காட்­டாக, 2100ஆம் ஆண்­டில் கடல் மட்­டம் ஐந்து மில்­லி­மீட்­டர் உய­ரக்­கூ­டும். இத்­த­கைய அச்­சு­றுத்­த­லைச் சமா­ளிக்க சிங்­கப்­பூர் $100 பில்­லி­யன் வரை முத­லீடு செய்ய வேண்­டும்," என்­றார் அவர்.

கடற்­க­ரைப் பாது­காப்பு தொடர்­பான ஆய்­வு­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. தடுப்­பு­கள் அமைப்­பது முதல் வடி­கால் உள்­கட்­ட­மைப்பு அமைத்­தல் வரை பல்­வேறு தீர்­வு­கள் கடல்­மட்ட உயர்­வி­லி­ருந்து நாட்­டைப் பாது­காக்­கத் தேவைப்­படும் என்­றார் அமைச்­சர்.

2030ஆம் ஆண்­டுக்­குள் சிங்­கப்­பூ­ரின் உண­வுத் தேவை­யில் 30 விழுக்­காட்டை உள்­ளூ­ரில் உற்­பத்தி செய்­வது எனும் திட்­டம் வருங்­கா­லத் தலை­மு­றை­யி­ன­ருக்­கான நமது கடப்­பாடு என்று கூறிய அமைச்­சர் ஃபூ, உள்­ளூர் உண­வுத் தயா­ரிப்பு அதி­க­ரிக்­கும்­போது வாடிக்­கை­யா­ளர்­கள் அவற்­றுக்கு ஆத­ரவு தர முன்­வ­ர­வேண்­டும் என்று கேட்­டுக்­கொண்­டார்.

வளங்­களை மேலும் சிறப்­பான முறை­யில் பயன்­ப­டுத்­தும் பொருட்டு சிங்­கப்­பூ­ரர்­கள் ஒரு­முறை பயன்­ப­டுத்­தி­ய­பின் தூக்கி வீசும் பழக்­கத்தை மாற்­றிக்­கொள்ள வேண்­டும் என்று அமைச்­சர் வலி­யு­றுத்­தி­னார்.