நாளை நோன்புப் பெருநாள்: சிங்கப்பூர் முஃப்தி

நாளை நோன்புப் பெருநாள்: சிங்கப்பூர் முஃப்தி

1 mins read
08dac604-d24d-450d-b498-6a4e579693a9
-

சிங்­கப்­பூர் முஸ்­லிம்­கள் இவ்­வாண்டு நோன்­புப் பெரு நாளை, நாளை சனிக்­கி­ழமை கொண்­டா­டு­வர் என்று முஃப்தி டாக்­டர் நசி­ரு­தீன் முக­மது நசீர் அறி­வித்­துள்­ளார்.

வானி­யல் கணக்­கு­க­ளின்­படி, இஸ்­லா­மிய நாள்­காட்­டி­யின் ஷவால் மாதத்­துக்­கான பிறை நேற்று சூரி­யன் மறைந்த பிறகு தெரி­ய­வில்லை என்று அவர் கூறி­னார்.

எனவே இந்த ஆண்­டின் நோன்­புப் பெரு­நாள், நாளை கொண்­டா­டப்­படும் என்று முஃப்தி விளக்­கி­னார்.

இத்­த­ரு­ணத்­தில் சிங்­கப்­பூ­ரில் உள்ள முஸ்­லிம்­கள் அனை­வ­ருக்­கும் நோன்­புப் பெரு­நாள் வாழ்த்­து­க­ளைத் தெரி­வித்­துக்­கொள்­வ­தா­கக் குறிப்­பிட்ட அவர், அனைத்­துச் சவால்­க­ளை­யும் கருணை, இரக்­கம் ஆகி­ய­வற்­று­டன் எதிர்­கொள்­வ­தில் சிங்­கப்­பூர் முஸ்­லிம் சமூ­கத்­தி­னர் ஒற்­று­மை­யு­டன் செயல்­பட வேண்­டும் என்று கேட்­டுக்­கொண்­டார்.