நோன்பு துறப்பில் மற்ற சமயத்தினர்; அதிபர் ஹலிமா நெகிழ்ச்சி

நோன்பு துறப்பில் மற்ற சமயத்தினர்; அதிபர் ஹலிமா நெகிழ்ச்சி

1 mins read
b53be59a-a37e-4966-b5f7-4ef675bea821
-

இந்த ஆண்­டின் நோன்பு மாதம் அர்த்­த­முள்­ள­தாக அமைந்­து இருப்­ப­தாக அதி­பர் ஹலிமா யாக்­கோப் கூறி­யி­ருக்­கி­றார்.

இந்த ஆண்டு ரம­லான் மாதம் முஸ்­லிம் சமூ­கத்­திற்­குள்­ளும் அதற்கு அப்­பா­லும் உறவு­களைப் புதுப்­பித்­துக்­கொள்­ளும் அதே­வே­ளை­யில் வலுப்­படுத்­தும் வித­மா­க­வும் அமைந்­து இருப்­ப­தாக அவர் கூறி­னார்.

அதி­பர் நேற்று ஃபேஸ்புக்­கில் பதிவிட்ட காணொளியில் அவ்வாறு கூறியுள்ளார்.

உதவி தேவைப்­ப­டு­வோர் வாழ்க்­கைச் செல­வு­க­ளைச் சமா­ளிக்க உத­வும் முயற்­சி­களை முஸ்­லிம் சமூ­கம் அதி­க­ரித்­து இருப்­பதை அவர் சுட்­டி­னார்.

இஸ்­தா­னா­வில் தாம் அளித்த நோன்பு துறப்பு விருந்­தில் தம் அழைப்பை ஏற்­றுக் கலந்­து­கொண்ட 'பீ கைண்ட் எஸ்ஜி' தொண்­டூ­ழி­யர்­களில் பல்­வேறு இனங்­க­ளை­யும் சம­யங்­க­ளை­யும் சேர்ந்­தோர் இருந்­த­தாக அதி­பர் ஹலிமா குறிப்­பிட்­டார்.

இஸ்­லா­மிய சம­யத்­தில் விருந்­தோம்­பல், வெளிப்­ப­டைத்­தன்மை ஆகி­யவை போற்­றப்­படு­கின்­றன. அதற்­கேற்ப மற்ற சம­யத்­தி­னரை நோன்பு துறப்பு நிகழ்ச்­சிக்கு அழைப்­பது சிங்­கப்­பூ­ரர்­க­ளி­டையே வழக்­க­மாக இருப்­பது குறித்து தாம் நெகிழ்ச்சி அடை­வ­தாக அவர் கூறி­னார்.

இத்­த­கைய நட­வ­டிக்­கை­கள் சமூக ஒருங்­கி­ணைப்­பிற்­கும் வலு­வான பிணைப்­பிற்­கும் வெவ்­வேறு கலா­சா­ரங்­கள் குறித்த புரி­த­லுக்­கும் வழி­வகுப்­ப­தாக அதி­பர் கூறி­னார்.

"சிங்­கப்­பூர் முஸ்­லிம்­கள் இந்த ஆண்டு நோன்­புப் பெரு­நாளை அமை­தி­யா­க­வும் மகிழ்ச்­சி­யு­ட­னும் கொண்­டா­டும் வேளை­யில், இயற்­கைப் பேரி­டர், போர், சர்ச்­சை­கள் உள்­ளிட்­ட­வற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்ள நாடு­களில் வசிக்­கும் முஸ்­லிம்­க­ளின் நிலை குறித்து சிந்­தித்­துப் பார்க்­க­வும் நேரம் ஒதுக்க வேண்­டும். அவர்­கள் நல­னுக்­காக துஆ செய்வோம்," என்று அதி­பர் ஹலிமா யாக்கோப் கேட்­டுக்­கொண்­டார்.