தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமைச்சர் ஓங்: நாடாளுமன்ற விவாதங்கள் சமூகப் பிரிவினைக்கு வித்திடக்கூடாது

2 mins read
8bf1cd28-ec8b-42b9-bc7f-9285cb1f8998
-

கருத்து வேறு­பாடு அர­சி­ய­லில் வழக்­கமான ஒன்று என்­றா­லும் நாடா­ளு­மன்ற விவா­தங்­கள் சமூ­கத்­தின் பிணைப்­பு­க­ளைத் தகர்ப்­ப­வை­யாக இருக்­கக்­கூ­டாது என்று சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் (படம்) வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

"நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் விவா­தம் செய்­ய­லாம். சூடான பதில்­க­ளைப் பரி­மா­றிக் கொள்­ள­லாம். ஆனால் அவை சமூ­கப் பிணைப்­பைப் பாதிக்­கும் அள­விற்­குத் தொடர்ந்­தால் வேற்­று­மைக்­கும் பிள­வு­க­ளுக்­கும் அது வித்­தி­டக்­கூ­டும்," என்றார் அவர்.

அதி­பர் உரை மீதான விவா­தங்­க­ளின்­போது எதிர்த்­த­ரப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் முன்­வைத்த கருத்­து­க­ளுக்கு நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று அமைச்­சர் பதி­ல­ளித்­தார்.

சென்ற செவ்­வாய்க்­கி­ழமை தொகு­தி­யில்லா நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் லியோங் மன் வாய், சிங்­கப்­பூர் முன்­னேற்­றக் கட்சி மீது இன­வா­தச் சாயம் பூச அர­சாங்­கம் முயல்­வ­தா­கக் கூறி­னார்.

சிங்­கப்­பூ­ரர்­க­ளான ஊழி­யர்­களின் கவ­லை­கள் பற்­றிக் குரல் கொடுக்­கவே தமது கட்சி முயன்­றது என்­றார் திரு லியோங்.

அதற்­குப் பதி­ல­ளிக்­கை­யில், "அர­சாங்­கம் எப்­போ­தும் நாடா­ளு­மன்­றத்­தின் பல்­வேறு உறுப்­பி­னர்­க­ளின் அக்­க­றை­க­ளுக்கு மதிப்­ப­ளித்து வந்­துள்­ளது. சிங்­கப்­பூர் முன்­னேற்­றக் கட்சி நாடாளு­மன்ற உறுப்­பி­னர்­களும் அவர்­களில் அடங்­கு­வர்," என்று அமைச்­சர் ஓங் கூறி­னார்.

"வேலை­கள், மாறி­வ­ரும் பொரு­ளி­ய­லில் போட்­டித்­தன்மை, வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக வீடு­கள் கட்­டுப்­ப­டி­யான விலை­யில் கிடைப்­பது போன்­றவை குறித்த சிங்­கப்­பூ­ரர்­க­ளின் கவ­லை­களுக்கு அர­சாங்­கம் மதிப்­ப­ளிக்­கிறது.

"இத்­த­கைய விவ­கா­ரங்­க­ளுக்­குத் தீர்­வு­கா­ண­வும் கொள்­கை­ளில் திருத்­தம் செய்­ய­வும் அர­சாங்­கம் கடு­மை­யா­கப் பணி­யாற்­று­கிறது," என்று குறிப்­பிட்ட திரு ஓங், சிங்­கப்­பூ­ருக்­கும் இந்­தி­யா­விற்­கும் இடை­யி­லான விரி­வான பொரு­ளி­யல் ஒத்­து­ழைப்பு ஒப்­பந்­தம் தொடர்­பில் 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் நாடா­ளு­மன்­றத்­தில் நடை­பெற்ற விவா­தத்­தைச் சுட்­டி­னார்.

ஒப்­பந்­தம் தொடர்­பான பேச்­சு­களில் ஈடு­பட்­ட­வர் என்ற முறை­யில் அப்­போது தாம் சிங்­கப்­பூ­ரின் குடி­நு­ழை­வுக் கொள்கை உரி­மை­க­ளுக்கு பாதிப்பு ஏற்­ப­டாது என்று நாடா­ளு­மன்­றத்­தில் விளக்­கிக் கூறிய பிற­கும் அந்த ஆண்டு செப்­டம்­ப­ரில் திரு லியோங் அந்த ஒப்­பந்­தம் சிங்­கப்­பூ­ரர்­க­ளி­டையே பர­வ­லாக வேலை, வாழ்­வா­தா­ரம் தொடர்­பில் மனக்­க­வ­லையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தா­கத் தீர்­மா­னம் கொண்டு வந்­ததை அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

"பல்­லின சமு­தா­ய­மான சிங்­கப்­பூ­ரின் நல்­லி­ணக்­கம், கடின உழைப்­பின் பல­னாய் கிட்­டிய ஒன்று. அதை எளி­தாக எடுத்­துக்­கொள்­ளக்­கூ­டாது," என்­றார் அவர்.

நாடா­ளு­மன்­றத்­தில் புதிய யோச­னை­கள் முன்­வைக்­கப்­பட்­டால் கட்­சிப் பாகு­பா­டின்றி அவை கருத்­தில் கொள்­ளப்­ப­டு­கின்­றன என்று கூறிய அமைச்­சர் ஓங், பல யோச­னை­கள் மாறு­பட்­டவை அல்ல; அர­சாங்­கத்­தின் தற்­போ­தைய கொள்­கை­க­ளின் விரி­வாக்­க­மா­கவே அவை அமைந்­துள்­ளன என்­றார்.