'ஓமிக்ரான் எக்ஸ்பிபி' திரிபு குறித்து சுகாதார அமைச்சு விளக்கம்

'ஓமிக்ரான் எக்ஸ்பிபி' திரிபு குறித்து சுகாதார அமைச்சு விளக்கம்

1 mins read
15b673b1-041f-488e-a1f7-2741a51f3441
-

கொவிட்-19 கிரு­மி­யின் 'ஓமிக்­ரான் எக்ஸ்­பிபி' திரிபு அதற்கு முந்­தைய 'டெல்டா' திரி­பைக் காட்­டி­லும் ஐந்து மடங்கு நச்­சுத்­தன்மை வாய்ந்­தது என்று பர­விய தக­வல் குறித்­துச் சுகா­தார அமைச்சு விளக்­கம் அளித்­துள்­ளது. அது பொய்­யான தக­வல் என்று அமைச்சு நேற்று முன்­தினம் ஃபேஸ்புக்­கில் பதி­விட்டு உள்­ளது.

'எக்ஸ்­பிபி' திரிபை மருத்­து­வப் பரி­சோ­த­னை­யில் கண்­ட­றி­வது கடி­னம் என்­றும் 'டெல்டா' ரக கிரு­மித் திரி­பை­விட அது அதி­க­மான உயி­ரி­ழப்பை ஏற்­ப­டுத்­தும் ஆற்­றல் கொண்­டது என்­றும் அண்­மை­யில் தக­வல்­கள் பர­வின.

'வாட்ஸ்­அப்' மூலம் பர­விய அந்­தத் தக­வ­லில் உண்மை இல்லை என்று அமைச்சு உறு­திப்­ப­டுத்­தி­யது.

"அனைத்­து­லக அள­வி­லும் உள்­ளூ­ரி­லும் மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்­வு­க­ளின்­படி 'எக்ஸ்­பிபி' திரிபு 'டெல்டா' திரி­பை­க் காட்டிலும் வீரியம் குறைந்தது.

"அத­னால் உயி­ரி­ழப்பு விகி­தம் அதி­க­ரிக்­க­வில்லை.

"தற்­போ­தைய கொவிட்-19 பரி­சோ­த­னைக் கரு­வி­கள் அந்­தத் திரிபு உள்­ளிட்ட அனைத்து கொவிட்-19 கிரு­மி­க­ளை­யும் கண்­ட­றிய வல்­லவை," என்று அமைச்சு குறிப்­பிட்­டது.

கொவிட்-19 கிரு­மிப் பர­வல் குறித்த ஆக அண்­மைத் தக­வல்­க­ளுக்கு சுகா­தார அமைச்­சின் இணை­யத்­த­ளத்தை நாடும்­படி பொது­மக்­கள் கேட்­டுக்­கொள்­ளப்­பட்­டுள்­ள­னர்.