கரிமக் கழிவற்ற பொருளியல்: விரைவில் சாதிக்க நிதித் திட்டம்

கரிமக் கழிவற்ற பொருளியல்: விரைவில் சாதிக்க நிதித் திட்டம்

2 mins read
9af5d823-7009-4392-8ff6-4ea9c9378ad1
-

பசுமை நிதித் திட்டத்தை சிங்கப்பூர் நாணய ஆணையம் விரிவுபடுத்துகிறது

சிங்­கப்­பூர், கரி­மக் கழி­வற்ற பொரு­ளி­யலை விரை­வில் சாதிக்க விரும்­பு­கிறது. இதற்கு ஏது­வாக அது தன்­னு­டைய ஒரு­மித்த கவ­னத்தை விரி­வு­ப­டுத்­து­கிறது.

சிங்­கப்­பூர் இப்­போது பசுமை நிதி வளத்­தில் முக்­கிய கவ­னம் செலுத்­து­கிறது. இனி அது நிறு­வன உரு­மாற்­றத்­திற்கு நிதி அளிப்­ப­தி­லும் கவ­னம் செலுத்­த­வி­ருக்­கிறது.

தெள்­ளத்­தெ­ளி­வான வரை­யறை­க­ளைத் தீர்­மா­னிப்­பது, புத்­தாக்­கத்­திற்கு ஊக்­க­மூட்­டு­வது, மானி­யங்­களை விரி­வு­ப­டுத்­து­வது ஆகி­ய­வற்றை உள்­ள­டக்கி பசுமை நிதித் திட்­டம் விரி­வு­ப­டுத்­தப்­படும் என்று அறி­விக்­கப்­பட்டு உள்­ளது.

சிங்­கப்­பூர் நாணய ஆணை­யத்­தின் கரி­மக் கழி­வற்ற செயல் திட்­டத்­திற்­கான புதிய நிதி­வ­ளம் வழி­யாக இவை சாதிக்­கப்­படும்.

உரு­மாற்ற நிதி­யு­தவி என்­பது ஒரு வகை நிதி ஆத­ர­வா­கும். அது அதிக கரி­மக் கழிவை உரு­வாக்­கக்­கூ­டிய நிறு­வ­னங்­கள் நீண்­ட­கால முயற்­சி­க­ளின் மூலம் சுற்­றுச்­சூ­ழ­லுக்கு உகந்த நிறு­வ­னங்­க­ளாக மாற ஆத­ர­வ­ளிக்­கும்.

பசு­மைத் திட்­டங்­க­ளுக்கு நிதி வழங்­கும் உலக மைய­மாக சிங்­கப்­பூர் திகழ வேண்­டும் என்­பது இலக்கு. இத­னை­யொட்டி பசுமை நிதித் ­திட்­டம் என்ற ஒரு திட்­டத்தை ஆணை­யம் 2019ல் தொடங்­கி­யது.

அந்­தத் திட்­டம் இப்­போது விரி­வு­ப­டுத்­தப்­ப­டு­கிறது. அதன்­படி, எந்­தெந்த நட­வ­டிக்­கை­கள் பசுமை செயல்­க­ளாக, உரு­மாற்­றத்­தில் உள்ள நட­வ­டிக்­கை­க­ளா­கக் கரு­தப்­படும் என்­ப­தற்குத் தெள்­ளத்­தெ­ளி­வான வரை­மு­றை­கள் தேவைப்­படும் என்று துணைப் பிர­த­ம­ரும் நிதி அமைச்­ச­ரு­மான லாரன்ஸ் வோங் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தில் சுற்­றுச்­சூ­ழல் பசுமை நிதிப் பயி­ல­கம் என்ற அமைப்பை அதி­கா­ர­பூர்­வ­மா­கத் தொடங்கி வைத்து நேற்று திரு வோங் உரை­யாற்­றி­னார்.

மொத்­த­மா­கப் பார்க்­கை­யில், உலக பசுமைக்கூட வாயு வெளி­யாக்கத்­தில் சுமார் பாதி அள­வுக்கு ஆசிய நாடு­கள் காரணமாக உள்­ளன.

அதே நேரத்­தில் உல­கில் இந்­தப் பகு­தி­யில் வசிக்­கக்­கூ­டிய மக்­களில் மில்­லி­யன் கணக்கா னோருக்கு மின் வச­தியோ, நவீன கழிவு அகற்றும் வச­தி­களோ, குடி­நீர் வச­தியோ இல்லை.

இது ஒரு பெரிய சவா­லாக இருக்­கிறது என்று திரு வோங் தெரி­வித்­தார். இந்த வட்­டா­ர மக்­க­ளுக்குத் தேவை­கள் அதி­கரித்து வரு­கின்­றன.

அவற்றை நிறை­வேற்­றும் வகை­யில் அதிக எரி­சக்தி தேவைப்­படும் என்று திரு வோங் குறிப்­பிட்­டார்.