மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் இம்மாதம் 11ஆம் தேதி முதல் மேற்கொண்ட ஒன்பது நாள் சோதனைகளில் 35 சந்தேக நபர்கள் கைதாயினர்.
இணைய உரையாடல் செயலி மூலம் போதைப்பொருள் பரிவர்த்தனைகளில் அவர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்று அதிகாரிகள் சந்தேகப்படுகிறார்கள்.
மொத்தம் 9,529 கிராம் கஞ்சா, 916 கிராம் ஐஸ், 560 கிராம் எக்ஸ்டசி, 320 கிராம் கெட்டமின், 450 எரிமின்-5 மாத்திரைகள் பலவும் கைப்பற்றப்பட்டன.
அவற்றின் மதிப்பு கிட்டத்தட்ட $560,000 என்று மதிப்பிடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
கைதான அனைவரும் விசாரிக்கப்பட்டு வருவதாக அந்தப் பிரிவு தெரிவித்தது.

