சிங்கப்பூரில் வரத்தகம், தொழில்துறை பயனீட்டிற்காக, குறை கரிம ஹைட்ரஜன், அமோனியா கிடைப்பதற்கான வழிவகைகளை உருவாக்க 'கெப்பல் இன்ஃபராஸ்டிரக்சர்' நிறுவனமும் 'எக்சான்மொபில் ஆசியா பசிபிக்' நிறுவனமும் இணக்கம் கண்டுள்ளன.
கெப்பல் இன்ஃபராஸ்டிரக்சர் என்பது, கெப்பல் கார்ப்பரேஷனின் உள்கட்டமைப்பு நிறுவனமாகும். இதற்கான புரிந்துணர்வு குறிப்பில் நேற்று இருதரப்புகளும் கையெழுத்திட்டன.
சிங்கப்பூரின் மின் தேவையில் பாதியை 2050வது ஆண்டு வாக்கில் ஹைட்ரஜனைக் கொண்டு நிறைவேற்ற தேசிய உத்தியை அரசாங்கம் தீட்டி இருக்கிறது. அதை ஒட்டி இந்த இணக்கம் இடம்பெறுகிறது.
சிங்கப்பூரின் மின் உற்பத்தி தேவை இப்போது பெரும்பாலும் இயற்கை வாயுவைக் கொண்டு நிறைவேற்றப்படுகிறது.
குறைந்த அல்லது அறவே கரிமக் கழிவு இல்லாமல் மின் உற்பத்தியைச் சாதிக்க அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த நிறுவனங்கள் அதற்கு ஒத்துழைக்கும்.

