வியட்னாமியர் மீது குற்றச்சாட்டு

வியட்னாமியர் மீது குற்றச்சாட்டு

1 mins read
ee672c97-992f-43e4-9342-2f766accec78
-

வியட்­னா­மைச் சேர்ந்த பான் ஸுவான் பின், 49, என்­ப­வர், 'பிரைம் ஷிப்­பிங் கார்ப்­ப­ரே­ஷன்' என்ற நிறு­வ­னத்­திற்­குச் சொந்­த­மான கப்­பல் ஒன்­றின் தலை­வராக இருந்­தார்.

அவர், 2017ஆம் ஆண்­டில் அந்­தப் பொறுப்­பில் இருந்­த­போது US$790,000க்கும் மேற்­பட்ட மதிப்­புள்ள அல்­லது ஏறக்­கு­றைய S$1.1 மில்­லி­யன் மதிப்­புள்ள திருட்டு எரி­வாயு எண்­ணெய்­யைப் பெறு­வ­தற்கு இதர மூன்று பேரு­டன் சேர்ந்து திட்­டம் போட்டு இருக்­கி­றார் என்று கூறப்­ப­டு­கிறது.

திருட்­டுப் பொருளை நேர்மை­அற்ற முறை­யில் பெற்­ற­தா­கக் கூறும் இரண்டு குற்­றச்­சாட்­டு­கள், சிங்­கப்­பூர் மாவட்ட நீதி­மன்­றத்­தில் நேற்று அவர் மீது சுமத்­தப்­பட்­டன. வழக்கு ஜூன் 1ஆம் தேதிக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது.