'வோக் ஹே' எனும் பிரபல உணவகம் பயன்படுத்தும் தூரிகையில் பூச்சிகளைக் கண்டதாக ஒரு பெண் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சிங்கப்பூர் உணவு அமைப்பு விசாரணை மேற்கொண்டு வருகிறது.
திங்கட்கிழமையன்று (17 ஏப்ரல்) காலை 7.15 மணிக்கு காம்பஸ் ஒன் கடைத்தொகுதியில் இருக்கும் 'வோக் ஹே' கிளையைத் தாண்டிச் செல்லும்போது தூரிகையில் பூச்சிகள் இருந்ததைப் பெண் கண்டிருக்கிறார்.
அதை அவர் காணொளியில் பதிவுசெய்து 'ஸ்டாம்ப்' தளத்துக்கு அனுப்பினார்.
தூரிகையில் குறைந்தது மூன்று பூச்சிகள் இருந்தது காணொளியில் தெரிந்தது.
அந்தத் தூரிகை பாத்திரத்தைக் கழுவப் பயன்படுத்தப்படுவது.

