சுகாதார அமைச்சு: சில மருத்துவமனைகளில் படுக்கைக்காகக் காத்திருக்கும் நேரம் கூடியுள்ளது, ஆனால் சிகிச்சையில் தாமதம் இல்லை

சுகாதார அமைச்சு: சில மருத்துவமனைகளில் படுக்கைக்காகக் காத்திருக்கும் நேரம் கூடியுள்ளது, ஆனால் சிகிச்சையில் தாமதம் இல்லை

1 mins read
dcab4c67-6500-4753-9c1b-c21c9a7014d8
கூடுதலானோர் பல்வேறு மருத்துவப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சில மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படவேண்டிய நோயாளிகள் படுக்கைக்காகக் காத்திருக்கும் நேரம் கூடியுள்ளது; ஆனால் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதில்லை என்று சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

கூடுதலானோர் சிக்கலான மருத்துவப் பிரச்சினைகளுக்கு ஆளாகி வருகின்றனர்.

அதோடு, அண்மையில் அதிமானோருக்கு கொவிட்-19 கிருமித்தொற்றும் ஏற்பட்டு வருகிறது.

இந்தக் காரணங்களால் கடந்த இரண்டு வாரங்களில் சராசரியாக மருத்துவமனைகளில் படுக்கைக்காகக் காத்திருக்கும் நேரம் ஐந்திலிருந்து 7.2 மணிநேரத்துக்கு அதிகரித்துள்ளதென சுகாதார அமைச்சு வெள்ளிக்கிழமையன்று (21 ஏப்ரல்) குறிப்பிட்டது.