காப்புறுதித் திட்டத்தை அரசு முறைப்படுத்தும்

காப்புறுதித் திட்டத்தை அரசு முறைப்படுத்தும்

2 mins read
09534123-08fe-4a53-b714-cd6f91dc89de
-

புற்றுநோய் சிகிச்சை தொடர்பான செலவுகள் அதிகரித்தால்...

சிங்­கப்­பூ­ரில் புற்­று­நோய் சிகிச்­சை­யின் செலவு அதி­க­ரித்­துக் கொண்டே போனால், அர­சாங்­கம் தலை­யிட்டு தனி­யார் மருத்­துவ காப்­பு­று­தித் திட்­டங்­களை முறைப்­ப­டுத்த வேண்­டி­யி­ருக்­கும்.

புற்­று­நோய் சிகிச்­சைக்­கா­கும் அள­வுக்கு மீறிய கூடு­தல் மருந்­து­வச் செல­வு­களை ஏற்­கும் வண்­ணம் காப்­பு­று­தித் திட்­டங்­க­ளின் வரம்பு உயர்த்­தப்­ப­டு­வது குறித்து நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் பலர் கவலை தெரி­வித்த நிலை­யில் சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் நேற்று மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

இதில் தேவைப்­பட்­டால், சுகா­தார அமைச்­சும், காப்­பு­றுதி நிறு­வ­னங்­களை முறைப்­ப­டுத்­தும் சிங்­கப்­பூர் நாணய ஆணை­ய­மும் தலை­யிட்டு ஒருங்­கி­ணைந்த காப்­பு­று­தித் திட்­டங்­களும் அதில் கூடு­தல் செல­வு­க­ளுக்கு வழி­வகுக்­கும் பிரி­வு­க­ளை­யும் முறைப்­படுத்த மேலும் நட­வ­டிக்­கை­களை எடுக்­கும் என்று அவர் விளக்­கி­னார். இதன் தொடர்ச்­சி­யாக, புற்­று­நோய் மருந்­துச் செல­வு­களை­யும் அவற்றைக் காப்­புறுதித் திட்­டங்­கள் எந்த அள­வுக்கு ஏற்­கின்­றன என்­ப­தை­யும் தமது அமைச்சு கூர்ந்து கவ­னித்து வரு­வ­தாக அவர் தெரி­வித்­தார்.

புற்­று­நோய் சிகிச்­சை­யில் உயர் வரம்பு காப்­பு­றுதி எந்த அள­வுக்கு புற்­று­நோய் சிகிச்­சைக்கு ஆகும் செலவை அர­சாங்­கம் குறைக்க எண்­ணும் முயற்­சியை பாதிக்­கும் என இயோ சூ காங் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் யிப் ஹோன் வெங் வின­வி­னார்.

புற்­று­நோய் சிகிச்­சை­யில் தனி­யார் காப்­பு­றுதி நிறு­வ­னங்­கள் தங்­க­ளது ஒருங்­கி­ணைந்த காப்­புறு­தித் திட்­டங்­க­ளின்­கீழ் வழங்­கும் காப்­பு­றுதி அள­வில் மாற்­றங்­கள் கொண்டு வரப்­பட்­டன.

இத­னால், தனி­யார் காப்­பு­றுதி நிறு­வ­னங்­கள், சுகா­தார அமைச்சு தயா­ரித்த புற்­று­நோய் மருந்­துப் பட்­டி­ய­லில் உள்ள மருந்­து­க­ளின் செலவை மட்­டுமே அவை ஏற்­றுக்­ கொள்­ள­லாம்.

அத்­து­டன் அவை ஏற்­றுக்­கொள்­ளும் செல­வுக்கு வரம்பு விதிக்­கப்­பட்­டுள்­ளது. அமைச்­சின் புற்­று­நோய் மருந்­துப் பட்­டி­யல் கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளி­யி­டப்­பட்­டது என்­பது இங்கு நினை­வு­கூரத்­தக்­கது.

காப்­பு­று­தித் திட்­டங்­களில் கூடு­தல் செல­வு­களை ஏற்­றுக்­கொள்­ளும் பிரி­வு­கள் ஒரு நோயாளி­யின் மருத்­துவ செல வில், ஒருங்­கி­ணைந்த காப்­புறு தித் திட்­டத்­தின்கீழ் வராத, கூடு­தல் செல­வு­க­ளின் பெரும்­பகு­தியை ஏற்­றுக்கொள்­வ­தற்­காக உரு­வாக்­கப்­பட்­டது.

ஆனால், வாடிக்­கை­யா­ளர் ஒரு­வ­ருக்கு வரம்­பில்­லாத வகை­யில் காப்­பு­றுதி வழங்­கும் நோக்­கில் பல காப்­பு­றுதி நிறு­வ­னங்­கள் புற்­று­நோய் சிகிச்­சைக்கு ஆகக்­கூ­டிய எந்­த­வி­த­மான செல­வை­யும் ஏற்­றுக்­கொள்­ளும் வகை­யில் தங்­கள் காப்­பு­று­தித் திட்­டங்­களை அமைத்­தன.

இதில் சுகா­தார அமைச்­சின் புற்­று­நோய் பட்­டி­ய­லின்­கீழ் வராத மருந்­து­க­ளுக்கு ஆகும் செல­வும் அடங்­கும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.