கண்கவர் அம்சங்களுடன் மண்டாய் பறவைகள் மகிழ்வனம்

கண்கவர் அம்சங்களுடன் மண்டாய் பறவைகள் மகிழ்வனம்

1 mins read
a0cbbe37-373f-481c-b54b-ef9cefdf6913
-

அடுத்த மாதம் 8ஆம் தேதி பொது­மக்­க­ளுக்­காக திறந்­து­வி­டப்­படும் மண்­டா­யில் உள்ள 17 ஹெக்­டர் நிலப்­ப­ரப்பு கொண்ட பற­வை­கள் மகிழ்­வ­னம், நேற்று நடை­பெற்ற ஊடக முன்­னோட்­டத்­தின் அதன் முதல் பகுதி வரு­கை­யா­ளர்­களை வர­வேற்­றது.

வன­வி­லங்கு அமைப்­பின் நண்­பர்­கள், பள்­ளி­யின் கல்­வி­யா­ளர்­கள், பய­னா­ளி­கள் குழு­மங்­கள், இந்­தப் பூங்­காவை உரு­வாக்க உத­விய வெளி­நாட்டு ஊழி­யர்­கள் என இன்­னும் அதி­க­மான சிறப்பு வரு­கை­யா­ளர்­கள் மே 8ஆம் தேதிக்­குள் அந்த மகிழ்­வனத்­துக்கு வருகை புரி­வார்­கள்.

பற­வை­க­ளைப் பார்த்­த­வாறே நடந்­து­செல்­லும் எட்டுப் பாதை­கள். பல­மாடி பெங்­கு­வின் காட்­சிக்­கூ­டத்­தில் நீருக்­க­டி­யில் உள்ள பனிக்­கட்டி அமைப்­பு­கள், பாறை­கள், நீர் செடி­கள் இருக்­கும். 2,000 பேர் அம­ரக்­கூடிய வெளிப்­புற அரங்கு, பூங்­கா­வுக்கு உள்­ளே­யும் வெளி­யே­யும் பல்­வேறு உண­வுக் கடை­கள், பிள்­ளை­க­ளுக்­கான விளை­யாட்டு மைதா­னம் ஆகி­ய­வை­யும் அங்கு உண்டு.

பற­வை­கள் மகிழ்­வ­னம் மே 8ஆம் தேதி திறக்கப்­ப­டு­வதை ஒட்டி, மண்­டாய் வன­வி­லங்கு குழு­மம் 'மண்­டாய்' எனும் புதிய செய­லியை அறி­மு­கம் செய்­யும்.

மே 8 முதல் 26ஆம் தேதி வரை, பெரி­ய­வர்­க­ளுக்­கான கட்­ட­ணம் $38, மூன்று முதல் 12 வயது வரை­யி­லான சிறு­வர்­க­ளுக்கு $23, 60 அல்­லது அதற்கு மேற்­பட்ட வய­து­டை­ய­வர்­க­ளுக்கு $20 என்று கட்­ட­ணங்­கள் நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளன. 27ஆம் தேதிக்குப் பிறகு பெரியவர்களுக்கு $48, சிறுவர்களுக்கு $33. முதியோரின் கட்டணத்தில் மாற்றம் இல்லை.

இம்மாதம் 24ஆம் தேதி முதல் டிக்கெட் விற்பனை தொடங்கும்.