ஆறு வாகனங்கள் விபத்து: நான்கு பேர் காயமடைந்தனர்

1 mins read
83b2af21-21ec-4f49-bb6f-57a6829954f0
படம்: SG ROAD VIGILANTE -

மத்­திய விரை­வுச்­சா­லை­யில் நேற்றுக் காலை நேரத்­தில் ஆறு வாக­னங்­கள் சம்­பந்­தப்­பட்ட விபத்து நிகழ்ந்­தது. அதை­அடுத்து மூன்று ஆட­வர்­களும் ஒரு மாதும் மருத்­து­வ­ம­னைக்குக் கொண்டு செல்­லப்­பட்­ட­னர்.

அந்த விபத்­தில் இரண்டு கார்­களும் நான்கு மோட்­டார்­சைக்­கிள்­களும் சம்­பந்­தப்­பட்டு இருந்­த­தாக காவல்­து­றை­யும் சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை­யும் நேற்று தெரி­வித்­தன.

மோட்­டார் சைக்­கிளை ஓட்டி வந்த 25 வயது மாதும் இதர மூன்று மோட்­டார்­சைக்­கி­ளோட்­டி­களும் சுய­நி­னை­வு­டன் மருத்­து­வ­ம­னைக்குக் கொண்டு செல்­லப்­பட்­ட­தாக காவல்­துறை தெரி­வித்­தது.

இந்த விபத்து தொடர்­பில் ஓர் ஆட­வ­ரும் ஒரு மாதும் புலன்­வி­சா­ர­ணை­யில் உதவி வரு­கி­றார்­கள்.