மத்திய விரைவுச்சாலையில் நேற்றுக் காலை நேரத்தில் ஆறு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்து நிகழ்ந்தது. அதைஅடுத்து மூன்று ஆடவர்களும் ஒரு மாதும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அந்த விபத்தில் இரண்டு கார்களும் நான்கு மோட்டார்சைக்கிள்களும் சம்பந்தப்பட்டு இருந்ததாக காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் நேற்று தெரிவித்தன.
மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த 25 வயது மாதும் இதர மூன்று மோட்டார்சைக்கிளோட்டிகளும் சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.
இந்த விபத்து தொடர்பில் ஓர் ஆடவரும் ஒரு மாதும் புலன்விசாரணையில் உதவி வருகிறார்கள்.

