கடல் பாதுகாப்பு கட்டமைப்புத் தரங்கள்: கழகம் உருவாக்கும்

கடல் பாதுகாப்பு கட்டமைப்புத் தரங்கள்: கழகம் உருவாக்கும்

1 mins read
2b8657a3-5475-4115-85b0-b23d2149ccbc
-

கட­லோரப் பாது­காப்பை உறு­திப்­படுத்­தும் புதிய உள்­கட்­ட­மைப்பு வச­தி­கள் அனைத்­திற்­கும் பொது­வான வடிவமைப்­புத் தரங்­க­ளை­யும் நிபந்­தனைகளை­யும் உரு­வாக்­கும் வகை­யில் பொதுப் பய­னீட்டுக் கழ­கம் ஆய்வு ஒன்றை நடத்­து­கிறது.

கடல் மட்­டம் அதி­க­ரிக்­கிறது. பரு­வ­நிலை மாற்­றங்­கள் ஏற்­படு­கின்­றன. அவற்­றில் இருந்து தன்­னைப் பாது­காத்­துக்­கொள்ள வேண்­டிய தேவை சிங்­கப்­பூ­ருக்கு இருக்­கிறது.

இதற்­காக கட­லோர பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­தும் புதிய உள்­கட்­ட­மைப்பு வச­தி­கள் தேவைப்­ப­டு­கின்­றன.

கான்­கி­ரீட் சுவர், அலை ஏற்­றத்தைத் தடுக்­கும் புதிய கத­வு­கள், நீர் பாய்ச்­சும் நிலை­யங்­கள் போன்ற புதிய கட­லோரப் பாது­காப்பு உள்கட்­ட­மைப்பு ஏற்­பா­டு­கள் அனைத்­திற்­கும் நடை­முறை நியதி தேவைப்­படும். இந்த விவ­ ரங்­க­ளைக் கழ­கம் தெரி­வித்­த­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறி­யது.

அத்­த­கைய உள்­கட்­ட­மைப்பு ஏற்­பா­டு­க­ளைச் செயல்­ப­டுத்­து வதும் பரா­ம­ரிப்­ப­தும் தரப்­ப­டுத்­தப்­படும் என்­பது ஒப்­பந்­தப் புள்ளி ஆவ­ணங்­கள் மூலம் தெரி­ய­வரு­வ­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.

இப்­போ­து உள்ள அணைக்­கட்­டுகளுக்கும் புதிய அணைக்­கட்­டு­க­ளுக்­கும் இதர கட­லோர பாது­காப்பு ஏற்­பா­டு­க­ளுக்­கும் பக்­கத்­தில் பாது­காப்பு இடைவழி இருக்க வேண்­டும் என்று பொதுப் பய­னீட்­டுக் கழ­கம் குறிப்­பி­டு­கிறது. கழ­கம் மூன்று இடங்­களில் கட­லோரப் பாது­காப்பு ஆய்­வு­களைத் தொடங்கியுள்ளது.

அவற்­றின் மூலம் எந்த வகை கட­லோ­ரப் பாது­காப்பு உள்கட்­ட­மைப்பு வச­தி­கள் தேவைப்­படும் என்­பது தீர்­மா­னிக்­கப்­படும்.