சிங்டெல் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஆஸ்திரேலியாவின் 'ஆப்டஸ்' தொலைத் தொடர்பு நிறுவனத்திற்கு எதிராக 100,000 பேருக்கும் மேற்பட்ட இப்போதைய, முன்னாள் வாடிக்கை யாளர்கள் சேர்ந்து வழக்குத் தொடுத்துள்ளனர்.
சென்ற ஆண்டில் இடம்பெற்ற இணையப் பாதுகாப்பு மீறல் காரணமாக கிட்டத்தட்ட 1.2 மில்லியன் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்பில் வழக்குத் தொடரப்படுவதாக வழக்கறிஞர்கள் கூறினர்.
ஆப்டஸ் தொடங்கி பல இணையப் பாதுகாப்பு ஊடுருவல்கள் இடம்பெற்று ஆஸ்திரேலியாவின் நிறுவனத் துறையின் மில்லியன்கணக்கான வாடிக்கையாளர்களின் விவரங்கள் கசிந்ததாகக் கூறப்பட்டது.
அதன் விளைவாக ஆஸ்திரேலிய அரசு புதிய இணையப் பாதுகாப்பு அமைப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டியதாயிற்று.
இதனிடையே, இதுபற்றி அறிக்கையில் கருத்து தெரிவித்த ஆப்டஸ், எந்தக் கூட்டு வழக்கையும் எதிர்த்து நிறுவனம் தற்காத்து வாதாடும் என்று தெரிவித்தது.