துவாஸ் சோதனைச்சாவடியில் மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள்

துவாஸ் சோதனைச்சாவடியில் மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள்

2 mins read
a41939fa-1da5-4af8-9ced-94f8105880ba
-

மார்ச் 24ஆம் தேதி நிகழ்ந்த விபத்தையடுத்து அதிகாரிகள் ஆராய்கிறார்கள்

துவாஸ் சோத­னைச்சாவ­டி­யில் மேலும் பல பாது­காப்பு ஏற்­பா­டு­களைச் சேர்ப்­பது பற்றி அதி­கா­ரி­கள் ஆராய்ந்து வரு­கி­றார்­கள்.

அந்­தச் சோத­னைச்சாவ­டி­யில் கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி சிங்­கப்­பூர் வாகன ஓட்டி ஒருவர் தன் காரை கட்­டுப்­ப­டுத்த முடி­யாமல் துணை காவல்துறை அதிகாரி ஒரு­வர் மீது மோதி­விட்­டார். அந்த அதி­காரி கடு­மை­யாக காய­ம­டைந்­து­விட்­டார்.

பரி­சீ­லிக்­கப்­பட்டு வரும் புதிய பாது­காப்பு ஏற்­பா­டு­களில் மேலும் வாக­னத் தடை சட்­டங்­களை அமைப்­பது, அதி­கா­ரி­கள் பணி­யாற்­றும் கண்­கா­ணிப்பு மேடையை வாக­னம் வரும் வழி­யில் இருந்து விலக்கி வேறு இடத்­தில் வைப்­பது ஆகி­யவை அடங்­கும் என்று சட்ட, உள்­துறை அமைச்­சர் கா சண்­மு­கம் தெரி­வித்­தார்.

ஹவ்­காங் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் டெனிஸ் டான் தாக்­கல் செய்­தி­ருந்த நாடா­ளு­மன்றக் கேள்­விக்கு எழுத்து மூல­மாக அளித்த பதி­லில் அமைச்­சர் சண்­மு­கம் இந்த விவ­ரங்­க­ளைக் குறிப்­பிட்­டார்.

சோத­னைச்சாவடி வழி­யாக அங்­கீ­கா­ரம் இல்­லா­மல் வாக­னங்­கள் வந்து செல்­வதைத் தடுக்­கும் முயற்­சி­க­ளின் ஒரு பகு­தி­யாக துணை காவல்­துறை அதி­கா­ரி­கள் கண்­கா­ணிப்­புக் கூடத்­தில் பணி­யில் அமர்த்­தப்­ப­டு­கி­றார்­கள்.

அந்­தக் கூடம் அமைந்­துள்ள இடத்­தில்­தான் மார்ச் மாதம் விபத்து நிகழ்ந்­து­விட்­டது என்று அமைச்­சர் தன் பதி­லில் விளக்­கி­னார்.

வாக­னத்தை ஓட்டி வந்த 42 வயது ஆட­வர் போதை­யில் இருந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது. அவர் துவாஸ் சோத­னைச்­சாவடிக்­குச் செல்­லும் மேம்­பா­லப் பாதை வழி­யாக அதி­வே­கத்­தில் காரை ஓட்டி வந்­த­தாக முதல் கட்ட புலன்­வி­சா­ரணை மூலம் தெரி­ய­வந்­தது.

அந்த விபத்தை அடுத்து வாகன ஓட்­டு­ந­ரும் அதி­கா­ரி­யும் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­ட­னர்.

ஆணை­ய­மும் அந்த அதி­கா­ரி­யின் நிறு­வ­ன­மான 'செர்டி­சும்' அவ­ரு­டைய குடும்­பத்­து­டன் தொடர்­பு­கொண்டு தொடர்ந்து உத­வி­யை­யும் ஆதரவை­யும் வழங்­கும் என்று அமைச்­சர் தெரி­வித்­தார்.

காரை ஓட்டி வந்­த­வர் விபத்து நிகழ்ந்த நாளன்றே கைதா­னார். புலன்­வி­சா­ரணை நடப்­ப­தால் மேலும் தக­வல்­களை வெளி­யிட இய­லாது என்று அமைச்­சர் தெரி­வித்­தார்.

சோத­னைச்சாவடி பகு­தி­யில் இப்­போது பல பாது­காப்பு ஏற்­பாடு­கள் நடப்­பில் இருந்து வரு­கின்­றன. அதி­கா­ரி­களும் இரு­வர் இரு­வ­ராக பணி­யில் அமர்த்­தப்­பட்டு போக்­கு­வ­ரத்­தைக் கண்­காணித்து வரு­கி­றார்­கள்.

சாலை­களில் போதிய அளவுக்கு வெளிச்­சம் இருப்­பதை ஆணை­யம் உறு­திப்­ப­டுத்து­கிறது என்று கூறிய அமைச்­சர், வாகன ஓட்­டி­கள் போக்­கு­வ­ரத்து விதி­மு­றை­களை மீறா­மல் நடந்து கொள்ள வேண்­டும் என்று வலியுறுத்திக் கூறினார்.

"அதி­கா­ரி­கள் பிறப்­பிக்­கும் உத்­த­ர­வுக்­கு அவர்கள் கீழ்ப்படி­ய­வேண்­டும். குடித்­து­விட்டு ஒரு­போ­தும் வாக­னம் ஓட்­டக்கூடாது. அப்­படி ஓட்­டு­வ­தால் கொடுக்க வேண்­டிய விலை மிக அதிகம் என்­ப­தையே இந்த விபத்து புலப்­படுத்தி இருக்­கிறது," என்று அமைச்­சர் தெரி­வித்­தார்.