ஜோகூர் சுல்தான் விருந்தில் சிங்கப்பூர் தலைவர்கள்

ஜோகூர் சுல்தான் விருந்தில் சிங்கப்பூர் தலைவர்கள்

1 mins read
f4b30932-1862-4f12-9b48-d74b000fff1d
-

ஜோகூர் சுல்­தான் இப்­ரா­ஹிம் இஸ்­கந்­தர் அளித்த நோன்­புப் பெரு­நாள் பொது வர­வேற்பு விருந்­தில் சிங்­கப்­பூ­ரின் நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற அமைச்­சர் கிரேஸ் ஃபூ (இடது), மனி­த­வள அமைச்­சர் டான் சீ லெங் (படத்தில் வல­க்கோடி) கலந்­து­கொண்­ட­னர்.

கொவிட்-19 கார­ண­மாக மூன்­றாண்­டு­க­ளுக்­குப் பிறகு இந்த ஆண்­டில் ஜோகூர் சுல்தான் பொது வர­வேற்பு விருந்து நிகழ்ச்­சிக்கு ஏற்­பாடு செய்­திருந்­தார்.

ஜோகூர் சுல்­தான் இருப்­பி­ட­மான புக்­கிட் செரி­னில் அந்த நிகழ்ச்சி நடந்­தது. முன்­ன­தாக சுல்­தானை சிங்­கப்­பூர் அமைச்­சர்­கள் சந்­தித்­துப் பேசி­னர்.

பிறகு இடம்­பெற்ற விருந்­தில் சுல்­தான் (வல­மி­ருந்து 2வது), அவ­ரின் துணை­வி­யார் ராஜா ஸரித் சோஃபியா, அரச குடும்ப உறுப்­பி­னர்­கள் ஆகி­யோர் கலந்து­கொண்­ட­னர்.

இத­னி­டையே, சிங்­கப்­பூர் அமைச்­சர்­க­ளின் இந்த வருகை சிங்­கப்­பூ­ருக்­கும் ஜோகூ­ருக்­கும் இடை­யில் நிலவி வரும் மன­முவந்த, நீண்டகால உறவை மறு­உ­று­திப்­ப­டுத்­து­வ­தாக வெளி­யு­றவு அமைச்சு அறிக்கை ஒன்­றில் நேற்று தெரி­வித்­தது.

படம்: சிங்­கப்­பூர் வெளி­யு­றவு அமைச்சு