சிங்கப்பூரில் இந்த ஆண்டில் 12 வீடமைப்பு வளர்ச்சிக் கழக கார் பேட்டைகளில் 30க்கும் மேற்பட்ட புதிய மின்னேற்றி நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
நிலப் போக்குவரத்து ஆணையம், இந்த ஆண்டு முடிவு வாக்கில் 700க்கும் மேற்பட்ட வீவக கார் பேட்டைகளில் 2,000 மின்னேற்றி நிலையங்களை அமைக்க இலக்கு நிர்ணயித்து இருக்கிறது.
இதுவரையில் 30 நிலையங்கள்தான் அமைக்கப்பட்டு உள்ளன என்றாலும் தன்னுடைய திட்டம் சரியானபடி முன்னேற்றம் கண்டு வருவதாக ஆணையம் தெரிவித்தது.
வரும் 2025ஆம் ஆண்டு முடிவு வாக்கில் கிட்டத்தட்ட 2,000 வீவக கார் பேட்டைகளில் குறைந்தபட்சம் 12,000 மின்னேற்றி நிலையங்களை அமைக்க ஐந்து நிறுவனங்களுக்கு 10 ஆண்டு குத்தகை கொடுக்கப்பட்டுள்ளது.

