கணினித் தகவல் சேமிப்பு நிலையங்களின் கரிமக்கழிவற்ற மின்சாரப் பயனீட்டுத் திட்டம்

கணினித் தகவல் சேமிப்பு நிலையங்களின் கரிமக்கழிவற்ற மின்சாரப் பயனீட்டுத் திட்டம்

2 mins read
7bb567fb-dac9-4b6a-aef5-b0795c0ffe9f
-

சிங்­கப்­பூ­ரில் செயல்­படும் கணி­னித் தக­வல் சேமிப்பு நிலை­யங்­கள், ஹைட்­ர­ஜன் மின்­சக்­திக்கு மாறு­கின்­றன. சிங்­கப்­பூர் வரும் 2050ஆம் ஆண்­டு­வாக்­கில் அறவே கரி­மக் கழி­வற்ற நிலை­யைச் சாதிக்க வேண்­டும் என்று உறுதி பூண்­டுள்­ளது.

கணி­னித் தக­வல் சேமிப்பு நிலை­யங்­க­ளின் வளர்ச்சி அதற்­குத் தோதாக இருப்­பதை உறு­திப்­ப­டுத்­தும் வகை­யில், புதிய சுற்­றுச்­சூ­ழல் நிபந்­தனை இடம்­பெற்று வரு­கிறது. இதனை ஒட்டி அந்த நிலை­யங்­கள் ஹைட்­ர­ஜன் மின்­சக்­திக்கு மாறு­கின்­றன.

வழக்­க­மான கணி­னித் தக­வல் சேமிப்பு நிலை­யங்­கள் அதிக அளவு மின்­சா­ரத்­தைப் பயன்­படுத்து­பவை.

இணை­யப் பாது­காப்பு, தொலை­தூர கணி­னிப் பயன்­பா­டு­கள், இணைய வர்த்­த­கம் உள்­ளிட்ட நிறு­வ­னங்­க­ளின் ஏரா­ள­மான தக­வல்­களை அதிக அள­வில் சேமித்து வைக்­க­வும் செயல்ப­டுத்­த­வும் அனுப்­ப­வும் அந்த நிலை­யங்­களில் இருக்­கும் வன்­பொ­ருள்­க­ளுக்கு மின்­சா­ரம் அதிக அள­வில் தேவைப்­படும்.

அத­னால் அந்­தச் சாத­னங்­கள் அதிக வெப்­ப­ம­டை­யும். வெப்­பத்­தைக் குறைக்க குளிரூட்டி சாதன வசதி தேவைப்­படும். இதற்­கும் அதிக மின்­சா­ரம் வேண்­டும்.

இத­னி­டையே பங்­காளி நிறு­வ­னங்­க­ளு­டன் சேர்ந்து மிதக்­கும் கணி­னித் தக­வல் தொழிற்­பேட்டை ஒன்றை அமைப்­பது குறித்து தான் ஆராய்ந்து வரு­வ­தாக 'கெப்­பல் டேட்டா சென்டர்ஸ்' தன்­னி­டம் தெரி­வித்­த­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்­பிட்­டது.

அந்­தப் பேட்டை, 30 ஹெக்­ட­ருக்­கும் அதிக பரப்­ப­ள­வில் அமை­யும். அது 2026ஆம் ஆண்டு முதல் கட்­டம்­கட்­ட­மாக தயா­ரா­கும்.

அந்­தப் பேட்­டை­யில் திரவ குழாய் ஹைட்­ர­ஜன் வாயு­வைப் பயன்­ப­டுத்­து­வது பற்றி தான் பரி­சீலித்து வரு­வ­தா­க­வும் நிறு­வ­னம் தெரி­வித்­தது. அந்த வாயுவை இந்த வட்­டார நாடு­களில் இருந்து இறக்­கு­மதி செய்­ய­லாம்.

நீண்டகாலப்போக்­கில் பசுமை ஹைட்­ர­ஜனை பயன்­ப­டுத்­து­வது பற்றி நிறு­வ­னம் ஆரா­யும்.

சிங்­கப்­பூ­ரில் 2021ஆம் ஆண்டு­வாக்­கில் 70க்கும் மேற்­பட்ட கணி­னித் தக­வல் நிலை­யங்­கள் செயல்­பட்­டன.

அவை நாட்­டின் மொத்த மின்­சா­ரப் பய­னீட்­டில் சுமார் 7% அள­வுக்­குப் பொறுப்­பாக இருந்­தன.

'செராயா பார்ட்­னர்ஸ்' என்ற முத­லீட்டு நிறு­வ­னத்­திற்­குச் சொந்­த­மான 'எம்­பி­ரி­யோன் டிசி' என்ற நிறு­வ­னம், குறை கரிம ஹைட்­ர­ஜ­னில் இயங்­கும் கணினித் தக­வல் நிலை­யம் ஒன்றை அமைப்­ப­தற்­கான யோசனையை அர­சாங்­கத்­தி­டம் தாக்­கல் செய்­துள்­ளது.

சிங்­கப்­பூ­ரில் செயல்­படும் கணி­னித் தக­வல் நிலை­யங்­களுக்­குத் தேவைப்­படும் மின்­சா­ரத்தை வழங்­கும் வகை­யில் ஹைட்­ர­ஜன் எரி­பொ­ருள் மின்­க­லன்­க­ளைப் பரி­சோ­தித்­துப் பார்க்க ஏது­வாக சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­து­டன் சேர்ந்து செயல்­பட்­டு­வ­ரு­வ­தாக அமெ­ரிக்­கா­வின் மின்­னி­லக்க உள்கட்­ட­மைப்பு நிறு­வ­னம் 'ஈக்­யூ­னிக்ஸ்' அறி­வித்­துள்ளது.