நியமன உறுப்பினர் பரிந்துரைகள் குறைந்்தன

நியமன உறுப்பினர் பரிந்துரைகள் குறைந்்தன

2 mins read
b0825bbf-aca6-4db9-a4c7-6764cd94fdd6
-

நிய­மன நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் பத­விக்கு 30 பரிந்துரைகளே சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளன என்று நாடா­ளு­மன்ற அலு­வ­லர் அலு­வ­கம் தெரி­வித்­துள்­ளார்.

முன்­னைய பரிந்துரைக­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில், 2001ஆம் ஆண்­டி­லி­ருந்து இது­தான் ஆகக் குறை­வான எண்­ணிக்கை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இம்­மு­றைக்­கான பரிந்துரைகள் இம்­மா­தம் 19ஆம் தேதி மாலை 4.30 மணிக்­குள் சமர்ப்­பிக்­கப்­பட வேண்­டும் என்று முன்­ன­தாக அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. பரிந்துரை நில­வ­ரம் பற்றி அறிக்கை இம்­மா­தம் 21ஆம் தேதி­யன்று வெளி­யி­டப்­பட்­டது.

இப்­போது நாடா­ளு­மன்­றத்­தில் அதி­க­மான எதிர்த்­த­ரப்புக் குரல்­கள் இருப்­பது குறை­வான பரிந்துரைக­ளுக்­குக் கார­ண­மாக இருக்­க­லாம் என்று ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­த­ழி­டம் பேசிய முன்­னாள் நிய­மன நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் அரசியல் கவ­னிப்­பா­ளர்­களும் தெரி­வித்­த­னர்.

தற்­போது நாடா­ளு­மன்­றத்­தில் பாட்­டா­ளிக் கட்­சி­யின் தேர்ந்­தெடுக்­கப்­பட்ட ஒன்­பது உறுப்­பி­னர்­களும் சிங்­கப்­பூர் முன்­னேற்­றக் கட்­சி­யின் இரண்டு நிய­மன உறுப்­பி­னர்­களும் உள்­ள­னர்.

இருப்­பி­னும், நிய­மன உறுப்­பி­னர்­கள் சிங்­கப்­பூ­ரில் பார­பட்­ச­மற்ற கண்­ணோட்­டத்­தைத் தொடர்ந்து வழங்­க­லாம் என்று அவர்­கள் கருது­கின்­ற­னர்.

நாடா­ளு­மன்­றத்­தில் பரந்த அள­வில் கருத்­து­ப் பிர­தி­நி­தித்­து­வம் இருக்க வேண்­டும் என்­ப­தைக் கருத்­தில்கொண்டு நிய­மன நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் திட்­டம் 1990ல் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.

ஒவ்­வொருமுறை­யும் ஒன்­பது நிய­மன உறுப்­பி­னர்­கள் வரை தேர்வு செய்­யப்­ப­ட­லாம். அவர்­களின் பத­விக்­கா­லம் இரண்­டரை ஆண்­டு­கள் நீடிக்­கும்.

கடந்த 2020ல் நிய­மன உறுப்­பி­னர்­க­ளுக்­கான பரிந்துரை­ கோரிய நாடா­ளு­மன்ற அறிக்­கைக்­குப் பிறகு, 14வது நாடா­ளு­மன்­றத்­தின் முதல் அமர்­வுக்கு 61 பரிந்துரைகள் கிடைக்­கப்­பெற்­றன.

அது­தான் இத்­திட்­டம் அறி­மு­க­மா­ன­தி­ல் இருந்து கிடைக்­கப்­பெற்ற ஆக அதிக எண்­ணிக்கை.

13வது நாடா­ளு­மன்­றத்­தின் முதல் அமர்­வுக்கு 41 பரிந்துரை­கள் கிடைக்­கப்­பெற்­றன. இரண்­டாம் அமர்­வுக்கு 48 பெயர்­கள் பரிந்துரைக்கப்­பட்­டன.

2001 அக்­டோ­ப­ரில் கலைக்­கப்­பட்ட நாடா­ளு­மன்­றத்­தின் இறுதி அமர்­வுக்கு 21 பெயர்­கள் சமர்ப்­பிக்­கப்­பட்­டன.

அவ்­வாண்டு முதல் நிய­மன உறுப்­பி­னர்­க­ளுக்­கான பரிந்துரை­கள் எண்­ணிக்கை ஏறு­மு­க­மாக இருந்­தது.

12வது நாடா­ளு­மன்­றத்­தின் இரண்­டாம் அமர்­வுக்­கான நிய­மன உறுப்­பி­னர்­க­ளுக்­கான பரிந்­து­ரை­களில் சரிவு தென்­பட்­டது.