செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
7b028ccc-96ff-409a-8cd9-3affa0a1541c
-

சிக்லாப் சவுத் நடுவத்தில் புதிய சமூக நிலையம், விளையாட்டு வசதிகள்

சிக்லாப் சவுத் பகுதியில் அமைக் கப்பட உள்ள ஒருங்கிணைந்த மேம்பாட்டுத் திட்டத்தில் ஒரு புதிய சமூக நிலையம், விளையாட்டு வசதிகள் ஆகியவை கட்டப்படவிருக்கின்றன. அந்தக் கட்டுமானப் பணிகள் 2028 அல்லது 2029ல் நிறைவு பெறும். அந்தப் புதிய நடுவம் அப்பர் ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டில், தற்போதுள்ள திறந்தவெளி கார் நிறுத்தும் இடத்தில், ஷெல் பெட்ரோல் நிலையத்துக்குப் பக்கத்தில் அமையும்.

அந்த இடத்திலிருந்து 500 மீட்டருக்கு அப்பால் உள்ள தற்போதைய சிக்லாப் சவுத் சமூக நிலையம், புதிய சமூக நிலையம் அமைக்கப்பட்டவுடன் இடிக்கப்படும். தற்போதைய சமூக நிலையம் (படம்) 1960ல் கட்டப்பட்டது என்றும் அதன் வசதிகள் பழையதாகிவிட்டன என்றும் குடியிருப் பாளர்களின் தேவையைக் கருத்தில் கொண்டு புதிய சமூக நிலையம் பெரிய இடத்தில் அமைக்கப்படும் என்றும் சிங்கப்பூர் நில ஆணையத்தின் பேச்சாளர் தெரிவித்ததாக தி சண்டே டைம்ஸ் தெரிவித்தது.

ஐந்தில் ஒரு குடும்பம்தான் இலவச மறுசுழற்சி பெட்டியைப் பெற்றுக்கொண்டது

தேசிய சுற்றுப்புற வாரியம் விநியோ கிக்கும் மறுசுழற்சிப் பெட்டிகளை இதுவரை சுமார் 300,000 குடும்பங்கள் மட்டுமே பெற்றுக்கொண்டுள்ளன. பெட்டிகளைப் பெற்றுக்கொள்ளும் காலம் இம்மாதம் 30ஆம் தேதியன்று முடிவடைகிறது. 300,000 குடும்பங்கள் என்பது 1.39 மில்லியன் குடும்பங்களில் சுமார் 20%.

'புளுபாக்ஸ்' என்று அழைக்கப்படும் இந்தப் பெட்டி (படம்), மறுசுழற்சி முயற்சிகளை மேம்படுத்தாது என்று

தி சண்டே டைம்சிடம் பேசிய மக்களில் பலர் கருத்துத் தெரிவித்தனர். வேறு சிலரோ, தங்கள் வீட்டில் மறுசுழற்சி முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதால் 'புளுபாக்ஸ்' தேவைப் படாது என்றனர்.

அந்தப் பெட்டியில் ஐந்து கிலோ வரை காகிதம், பிளாஸ்டிக், கண்ணாடி, மின்னணுப் பொருள்கள் ஆகிய வற்றை வைக்கலாம். அந்தப் பெட்டி, மறுசுழற்சிப் பொருள் களால் நிரம்பியவுடன், பெட்டியில் உள்ள பொருள்களை புளோக்கின் கீழே வைக்கப்பட்டுள்ள பெரிய மறுசுழற்சிப் பெட்டிக்குள் போட்டுவிடலாம். மறுசுழற்சிப் பெட்டிகளை விநியோகிக்கும் சாதனங்கள் எங்குள்ளன என்பதை தெரிந்துகொள்ள குடியிருப்பாளர்கள் gowhere.gov.sg/bloobox எனும் இணையப் பக்கத்துக்குச் செல்லலாம்.

$100,000 திருட்டு; விமானத்தில் இருந்த சந்தேகநபர்கள் கைது

நாண­யம் மாற்று வணி­க­ரி­டம் இருந்து கிட்­டத்­தட்ட $100,000 திரு­டி­விட்டு சிங்­கப்­பூ­ரை­விட்டு தப்­பிக்க முயன்ற இரண்டு சந்­தேகநபர்­கள் காவல்­துறை அதி­கா­ரி­க­ளால் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர். சந்­தேகநபர்­கள் சாங்கி விமான நிலை­யத்­தில் பிராங்க்­ஃபர்ட் நக­ருக்­குச் செல்­லும் விமா­னத்­திற்­குள் இருந்­த­போது கைது செய்­யப்­பட்­ட­னர்.

ஏப்­ரல் 21ஆம் தேதி ஆட­வர்­கள் இரு­வ­ரும் கோல்­மன் ஸ்தி­ரீட்­டி­லுள்ள ஒரு நாணயமாற்று வணி­க­ரி­டம் பணத்தைத் திரு­டி­விட்­ட­தா­கக் காவல்­து­றைக்கு புகார் வந்­த­தாக அதி­கா­ரி­கள் கூறி­னர். 45 மற்­றும் 54 வயது சந்­தேகநபர்­கள் நாண­யமாற்று வணி­க­ரி­டம் தங்­க­ளுக்கு 75,000 அமெ­ரிக்க டாலர் வேண்­டும் என்று கேட்­டுள்­ள­னர். வணி­க­ரும் அதற்கு ஏற்­பாடு செய்ய, ஏப்­ரல் 21ஆம் தேதி சந்­தேகநபர்­கள் பணத்தை மாற்­று­வ­து­போல் கடைக்கு வந்­த­னர். அமெ­ரிக்க டால­ரைப் பார்ப்­ப­து­போல் பார்த்­து­விட்டு, பணத்­திற்கு தேவை­யான சிங்­கப்­பூர் வெள்ளி எடுத்து வரு­வ­தாகக் கூறி­விட்டு அங்­கி­ருந்து வெளி­யே­றி­னர்.

ஆனால், ஆட­வர்­கள் அமெ­ரிக்க டாலர்­க­ளைப் பார்­வை­யி­டும்போதே நூத­ன­மாகப் பணத்தைத் திரு­டி­யுள்­ள­னர். சிறிது நேரத்­திற்கு பிறகு ஆட­வர்­கள் வரா­த­தால் தம்­மி­டம் இருந்த அமெ­ரிக்க டாலரை சரி­பார்த்­துள்­ளார் வணி­கர். அப்­போதுதான் பணம் திரு­டு­போ­னது அவ­ருக்குத் தெரிந்­தது. வணி­கர் உட­ன­டி­யா­கக் காவல்­து­றை­யில் புகார் கொடுத்­தார். அதைத்­ தொ­டர்ந்து அதி­கா­ரி­கள் துரித நட­வ­டிக்கை எடுத்து சந்­தேகநபர்­களை கைது செய்­த­னர். சந்­தேகநபர்­க­ளி­டமிருந்து பணமும் மீட்கப்பட்டது.