தொழிலாளர் தினம்: முதல் நாளன்று கூடுதல் நேரம் இயங்கும் ரயில், பேருந்துச் சேவைகள்

தொழிலாளர் தினம்: முதல் நாளன்று கூடுதல் நேரம் இயங்கும் ரயில், பேருந்துச் சேவைகள்

1 mins read
2bfbae9a-e5ea-4634-98c9-5fade848cd85
கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

இவ்வாண்டின் மே தினத்துக்கு (தொழிலாளர் தினம்) முதல் நாளில் ரயில், பேருந்துச் சேவைகள் கூடுதல் நேரம் இயங்கவுள்ளன.

ஏப்ரல் 30ஆம் தேதியன்று வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு பெருவிரைவு ரயில் பாதைகளில் ஜூரோங் ஈஸ்ட், மரினா சவுத் பியர், பாசிர் ரிஸ், துவாஸ் லிங்க் நிலையங்களை நோக்கிச் செல்லும் கடைசி ரயில்கள் நகர மண்டபம் நிலையத்திலிருந்து பின்னிரவு 12.30 மணிக்குப் புறப்படும்.

வட்டப் பாதையில் ஹார்பர்ஃபிரண்ட் நிலையத்தை நோக்கிச் செல்லும் கடைசி ரயில் டோபி காட் நிலையத்திலிருந்து இரவு 11.55 மணிக்குக் கிளம்பும்.

அங்கே மாற்று திசையில் பயணம் செய்யும் கடைசி ரயில் 11.30 மணிக்குப் புறப்படும்.

தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதையில் கார்டன்ஸ் பை தி பே நிலையத்திலிருந்து உட்லண்ட்ஸ் நார்த் நிலையத்துக்குப் புறப்படும் கடைசி ரயில் பின்னிரவு 12.25 மணிக்குக் கிளம்பும்.

அங்கே மாற்றுத் திசையில் கடைசி ரயில் 12.02 மணிக்குப் புறப்படும்.

சில எஸ்எம்ஆர்டி பேருந்துச் சேவைகள் இயங்கும் நேரமும் நீட்டிக்கப்படும்.